
எத்தியோப்பியாவில் அறுபது லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு அவசர உணவு உதவி தேவை என்று எத்தியோப்பிய அரசாங்கம் சர்வதேச கொடையாளிகளைக் கேட்டிருக்கிறது.நீண்ட வறட்சி காரணமாக கிழக்கு ஆப்பிரிக்காவின் பெருநிலப்பரப்பில் விளைச்சல் நிலங்களும், மேய்ச்சல் நிலங்களும் பாதிக்கப்பட்டுவிட்டன.
எத்தியோப்பியாவின் துரிதமான சனத்தொகை வளர்ச்சியும், மற்றும் விவசாய நிலங்களிலேயே மக்களை தங்க வைப்பது என்ற அரசாங்க கொள்கை காரணமாக, விவசாய நிலங்கள் மிகச் சிறிய துண்டுகளாக பிரிக்கப்பட்டமையும் அடங்குகின்றன. இந்த சிறிய துண்டு நிலங்களால், அவற்றில் பயிரிடுபவர்களுக்கான உணவுகளையே வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது
No comments:
Post a Comment