Sep 8, 2012

இதன் மூலம் மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்?


1) எந்தவித பிரோஜனமான நடவடிக்கைகளும் நடக்காமல் பார்லிமண்டின் மழைகால கூட்டத்தொடர் 17 நாட்களையும் முடக்கி போட்டது பாரதிய ஜனதா என்கிற மாதவாத கட்சி. இதனால் எம்பிக்களுக்கு சம்பளமாக வழங்கப்பட்ட மக்களின் 20கோடி ரூபாய் வரிப்பணம் நஷ்டம்.  

  நாட்டை கெடுக்கும் மதவாதிகளை மக்கள் வெறுத்து ஒதுக்க வேண்டும்.

2) கூடங்குளம் அணு உலையை எதிர்த்து நாளை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக் குழு அறிவித்துள்ளது.  இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு உயிரிழப்பு ஏதும் நேரிட்டால், அவர்களது குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். 

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்: சிந்திக்கவும் ஆசிரியர் குழு.

3) தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்கவேண்டும் நாங்களும்தான் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொள்கிறோம். ஆனாலும் தொடர்கதையாக உள்ளது என்று தமிழர் தலைவர் என்று தன்னை கூறிக்கொள்ளும் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதை தடுக்க முடியாத மத்திய அரசில் மானம் கேட்டு அங்கம் வகிப்பதேன்?

4) இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு வருவதை தமிழக மக்கள் எதிர்க்கவில்லை; ஒரு சில அரசியல் கட்சியினர் மட்டுமே எதிர்க்கின்றனர் என BJP ஹிந்துத்துவா முரளி மனோகர் ஜோஷி தெரிவித்தார். 


இரட்டை வேடம். கேவலமான பிழைப்பு. மட்டமான அரசியல். 

5) இந்திய ராணுவத்தை, என்னிடம் ஒப்படைக்கும்படி சொல்லுங்கள், நாட்டில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும், ஒரு மாதத்தில் தீர்வு காணுவேன் என பால்தாக்ரே தெரிவித்தார். சிவசேனா கட்சியும், ராணுவம் போன்றே செயல்படுகிறது. ஆனால் எங்களிடம் ஆயுதங்கள் இல்லை காவி கொடிகள் மட்டுமே இருக்கிறது என்றார்.

வெறும் கையை வைத்து கொண்டே கலவரம் செய்யும் உங்களுக்கு ஆயூதம் கொடுத்தா இந்தியா முழுவதும் ரத்த கலரிதான்!

6 comments:

Unknown said...

நல்ல அரசியல் அலசல்....!!! சிந்திக்க வேண்டிய ஒன்று தான்....

என் வலைபதிவில் "ஒரு தாயின் பிராத்தனை".....

SNR.தேவதாஸ் said...

பாரதீய ஜனதா எப்படி மதவாத கட்சி?
கட்சியின் பெயரிலேயே மதத்தை வைத்திருக்கும் கட்சிகளாகிய இந்திய முஸ்லீம் லீக்,கிருஸ்துவ கட்சி இதனுடன் கூட்டனி வைத்துக் கொள்ளும் கட்சிகள் எல்லாம் என்னவாம்?
இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளும் மத வாதக் கட்சிகள்தான்.
அனைத்து கட்சிகளும் ஆட்சியில் இல்லாத போது மத வாத கட்சிகள்தான்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

Anonymous said...

முஸ்லிம் லீக் என்று கட்சி வைத்து கொண்டு என்ன கலவரமா செய்கிறார்கள்....... பாரதிய ஜனதா கட்சி என்று பொதுவான பெயரை வைத்து கொண்டு ரத யாத்திரை என்கிற றேத்த யாத்திரை அல்லவா நடத்துகிறார்கள்.

AZAD // NELLAI

SNR.தேவதாஸ் said...

திருநெல்வேலி மேலப்பாளையம்,திண்டுக்கல் பேகம்புர் வாணியம்மபாடி,ஆம்புர் ஆகிய இடங்களுக்குச் சென்று ஒரு முறை ஆழமாக ஊடுருவிப் பாருங்கள்.தங்களாலே நம்ப முடியாத பல தகவல்கள் தெரிய வரலாம்.
எல்லா கட்சிகளிலும் மதவாதிகளும்,நேர்மையானவர்களும் இருக்கிறார்கள். ஆதலால் எந்த கட்சியும் யோக்கியம் இல்லை.எனவே இதில் நல்ல மோசம் எது எனத்தான் தேட வேண்டும்.
வாழ்க வளமுடன்.
கொச்சின் தேவதாஸ்

ganesh said...

முஸ்லிம் லீக் என்று கட்சி வைத்து கொண்டு என்ன கலவரமா செய்கிறார்கள்?
நண்பா சும்மா காமெடி பண்ணாதிர்கள்

ganesh said...

நண்பா சும்மா காமெடி பண்ணாதிர்கள்