Oct 22, 2009

நியூஸிலாந்தில் 'நகல்' தாஜ்மஹால் உருவாக்கத் திட்டம்


உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹாலைப் போலவே நியூசிலாந்தில் ஒரு தாஜ்மஹால் நகலை உருவாக்கும் முயற்சியில் இந்தியர்கள் சிலர் இறங்கியுள்ளனர். 100 கோடி ரூபா செலவில் இந்த 'நகல்' தாஜ்மஹால் உருவாகவுள்ளது.

இந்தியாவில் உள்ளதைப் போலவே இந்த தாஜ்மஹால் உருவாகவுள்ளது. நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் இந்த புதிய தாஜ் மஹால் கட்டி எழுப்பப்படவுள்ளது.

இந்த மாதத்திலிருந்து தாஜ் மஹால் கட்டத் தேவையான நிதி வசூலில் காந்தி மையம் இறங்கியுள்ளது. பெருமளவில் நிதி வந்து குவிகின்றதெனவும் கூறப்படுகின்றது.

"எத்தியோப்பியாவில் அறுபது லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு அவசர உணவு உதவி தேவை", இவர்கள் என்னவென்றால் தாஜ்மஹால் கட்ட நிதி வசூல் செய்கிறார்கள்.இவர்கள் தான் இந்திய ஹிந்துத்துவா பிராமணர்களோ?

No comments: