Jun 13, 2017

சிறுநீரக கற்களை குணப்படுத்த எளிய வைத்தியம்!

சிறுநீரகத்தில் சேரக்கூடிய அதிகப்படியான கனிம சத்துக்களும், உப்பும் கற்களாக மாறிவிடும். இந்த கற்கள் சிறுநீரகத்தின் உள்ளே இருக்கும் போது எந்த ஒரு அறிகுறியையும் வெளிபடுத்தாது. ஆனால், இது சிறுநீரகப் பாதையை நோக்கி நகரும் போது அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். திடப்பொருளாக மாறக்கூடிய பொருட்கள் சிறுநீரகத்தில் கற்களாக மாறுகின்றன. இப்படி கற்கள் சிறுநீரகத்தில் சேர்வதற்கு ஒருவரது வாழ்க்கை முறையும், உணவு பழக்கவழக்கமும் தான் காரணம். 

அந்த பிரச்சனை ஏற்படாமல் தடுக்க வேண்டுமென்றால், ஆட்டு இறைச்சி, ஷெல் மீன் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மேலும் குறைவான அளவில் மாமிச வகை புரோட்டின்கள், அதிக அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் சேர்வதை தடுக்கலாம்.
சிறுநீரக கற்கள் உருவத்தில் வேறுபட்டிருக்கும். சிறியதாக இருந்தால் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். பெரிய கற்களாக இருந்தால் வலி ஏற்படுவதோடு வேறு சில அறிகுறிகளையும் ஏற்படுத்தும்.

முதுகு அல்லது அடிவயிற்றில் வலி சிறுநீரக கற்கள் இருந்தால், அது முதுகுப் பகுதியின் ஒரு பக்கம் மற்றும் அடி வயிற்றுப் பகுதியில் கடுமையான வலியை ஏற்படுத்தும். இந்த கற்கள் சிறுநீரக பாதையில் நகர்ந்து செல்லும் போது, வலி இன்னும் தீவிரமாக இருக்கும். சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல், துர்நாற்றத்துடனான சிறுநீர் மற்றும் இரத்தம் கலந்த சிறுநீர் போன்றவையும் சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளாகும். சிறுநீரக கற்கள் இருந்தால், அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தி உணர்வை அனுபவிக்கக்கூடும். சில நேரங்களில் காய்ச்சலும் வரக்கூடும்.

சிறுநீரக கற்களுக்கான இயற்கை வைத்தியங்கள்: 

1). எலுமிச்சை சாறு, ஆலிவ் ஆயில் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் இந்த கலவை சிறுநீரக கற்களை வேகமாக கரைக்க மிகவும் உதவியாக இருக்கும். அதற்கு எலுமிச்சை சாறு, ஆலிவ் ஆயில் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகரை ஒன்றாக கலந்து குடித்துவிட்டு, அதனைத் தொடர்ந்து 12 அவுன்ஸ் சுத்தமான நீரைக் குடிக்க வேண்டும். பின் 1/2 எலுமிச்சையை 12 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்க வேண்டும். இப்படி அடிக்கடி குடித்தால், விரைவில் சிறுநீரக கற்கள் கரையும்.

2). சீமை சாமந்தி வேர்: இந்த வேர் சிறுநீரகங்களை சுத்தம் செய்ய உதவும் மற்றும் சிறுநீரகங்களின் சாதாரண செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும். சிறுநீரக கல் பிரச்சனையில் இருந்து நல்ல தீர்வை விரைவில் பெற தினமும் இருவேளை 500மிகி இதனை எடுக்க வேண்டும்.

3).  கிட்னி பீன்ஸ்: கிட்னி பீன்ஸில் மக்னீசியம் ஏராளமாக உள்ளது. இது சிறுநீரக கற்களின் அறிகுறிகளைக் குறைக்க உதவும். அதற்கு சிறிது கிட்னி பீன்ஸை கொதிக்கும் நீரில் 6 மணிநேரம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, குளிர வைத்து நாள் முழுவதும் குடிக்க வேண்டும்.

4). மாதுளை ஜூஸ்: சிறுநீரக கற்கள் இருப்பவர்கள், மாதுளை ஜூஸை தினமும் குடித்து வந்தால், சீக்கிரம் சிறுநீரக கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

No comments: