ஷாருக்கான் தனது பிறந்த நாள் அன்று ‘நான் ஒரு தேசப்பற்றுள்ள இந்தியன். இங்கே நடக்கும் பிரச்சினைகள் என்னைக் கவலை கொள்ள வைக்கின்றன. இதற்காகவெல்லாம் நான் இந்தியாவை விட்டுக் கண்டிப்பாகப் போய்விடமாட்டேன். இந்த நாட்டில் வாழும் உரிமை பெற்ற தேசப்பற்றாளன் நான் என்று கட்டாயம் நினைக்கிறேன். மதரீதியான சகிப்புத்தன்மை இந்தியாவில் மிகமிகக் குறைவாக இருப்பது வருத்தப்படவைக்கிறது.. என் விருதுகளைத் திருப்பித்தர நான் தயார். இதற்காகப் போராடுபவர்களை நான் வரவேற்கிறேன்.ஆதரிக்கிறேன்’ என்று பிரகடனப்படுத்தினார். ஷாருக்கானின் இந்த பிரகடனத்தை கேட்டு அதிர்ச்சி உற்ற ஹிந்துத்துவா கும்பல் இவரை உடனே பாக்கிஸ்தான் போகுமாறு சொல்லி அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
இந்நிலையில் நடிகர் கமலஹாசன் திடீர் என்று தனது திருவாய் மலர்ந்துள்ளார். போரடிக்கும் பொழுது ஏதாவது பேசி ஓசி விளம்பரம் தேடிக்கொள்வதில் சுப்பிரமணிய சுவாமிக்கு நிகராக இவரை சொல்லலாம். தான் தயாரித்து நடித்த விஸ்வரூபம் வெளியிடுவதில் பிரச்சனை ஏற்பட்டதும் நாட்டை விட்டே போய்விடுகிறேன் என்று புலம்பியவர். இப்பொழுது விருகளை திருப்பிக்கொடுத்த எழுத்தாளர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் இலவச அறிவுரைகளை அள்ளி வீசியிருக்கிறார் விருதையெல்லாம் திருப்பித்தர இயலாது. இங்கு சகிப்புத்தன்மை இல்லையென்பது இன்று இல்லை பாகிஸ்தான் பிரிந்த போதே தெரிந்திருக்க வேண்டாமா? உங்களுடைய எதிர்ப்பை கட்டுரை எழுதிக் காட்டுங்கள், அத படித்து அனைவரும் திருந்திக்கொள்ளட்டும் மற்றும் வேறு பல வழிகள் உள்ளனவே’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டிற்கு லிவிங் டுகெதர் (living together) காலச்சாரத்தை கற்றுகொடுத்தவர். நடிகை கவுதமியுடன் திருமணம் ஆகாமல் குடும்பம் நடுத்துபவர். காவேரி நதிநீர் பிரச்சனை முதல் கூடங்குளம் அணு உலை வரை எந்த தமிழர் பிரச்சனைகளிலும் வாய்திறக்காது மவுனம் காத்தவர். இவர் பெற்ற விருதுகளை இவரிடம் யார் திருப்பிகொடுக்க சொன்னது, இவருக்கு மனதிற்குள் ஒரு பயம் தன்னை யாரும் குறை சொல்லி விட கூடாது அல்லது தன்னிடம் யாரும் விருதை ஏன் திருப்பி கொடுக்க வில்லை என்று கேட்டுவிட கூடாது என்று தானாகவே வந்து ஓசி உபதேசம் செய்கிறார். மக்களுக்கு தெரியும் நடிகர்கள் எப்படி நிஜவாழ்வில் நடிப்பார்கள் என்று.
3 comments:
நடிகர்களும் மனிதர்களே...!
என்னுடைய வலைப்பூவில் பயன்மிக்க பதிவொன்று: எல்லாவித கம்ப்யூட்டர் ஷார்ட் கட்கள் ஒரே இடத்தில்
சிந்திக்க வேண்டிய விடயம்..!
எனது வலைப்பூவில் பயனுள்ள பதிவொன்று: கம்ப்யூட்டர் ஷார்ட்கட்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
இவர் நவநிர்மான் சேனையின் தலைவரை அதே சூட்டோடு பார்த்து விட்டு வந்ததும், முன்பொருநாள் ரஜினி பால்தாக்கரேயை சந்தித்து விட்டு வந்ததும் தெரிந்துமா இவர்களின் சுயரூபம் தெரியாமல் இருக்கிறீர்கள்?
Post a Comment