Sep 13, 2014

ராஜபக்சேவுக்கு சு.சாமி கொடுத்த ஆலோசனை!

செப் 14/14: இந்திய - இலங்கை கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் இழுவை வலைகளைப் பயன்படுத்துவதால் கடல் வளம் அழிந்து போகிறது. இவ்வாறு தமிழக மீனவர்கள் கடல் வளத்தை அழிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது என்று இலங்கை சர்வாதிகாரி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

மேலும் இந்திய கடல் எல்லையை தாண்டி வந்து இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை எச்சரித்து திருப்பி அனுப்ப முடியாது. அவர்கள் திரும்பிச் சென்று மீண்டும் அதே தவறைத் தான் செய்வார்கள். எனவே இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட மீனவப் படகுகளை ஒருபோதும் திருப்பி அளிக்க முடியாது என்றார். 

மேலும், இந்தியா - இலங்கை இடையேயான உறவு பலமாகவே உள்ளது. அதற்கு, ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா இரண்டு முறை வாக்களித்திருப்பதும், ஒரு முறை இலங்கைக்கு எதிராக வாக்களிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்ததையும் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

சிந்திக்கவும்: இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட மீனவப் படகுகளை ஒருபோதும் திருப்பி அளிக்க முடியாது என்கிற இந்த ஐடியா நம்ம சுப்பிரமணிய சுவாமி கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments: