பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக மோடியின் நெருங்கிய கூட்டாளி அமித் ஷா (வயது 50) நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜகவின் தேசிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் அமித் ஷா மீது குஜராத்தில் சோராபுதீன், துளசிராம் பிரஜாபதி ஆகியவர்களைக் கொன்ற போலி மோதல் வழக்குகள் இன்னும் நிலுவையில்தான் உள்ளன.
2010-ல் குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்த போது இதற்காக பதவி விலகிய அமித் ஷா உடனடியாக மத்திய புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சபர்மதி சிறையிலும் இருந்திருக்கிறார். நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த இவர் இரண்டு ஆண்டுகள் குஜராத் மாநிலத்திற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டிருந்தார்.
உத்திரபிரதேசம் காப் பஞ்சாயத்துகள், முசா்பர் நகர் கலவரம் போன்றவற்றில் இந்துமதவெறியை கிளப்பிவிட்ட ஷா அதையே மூலதனமாக வைத்து, நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் உபியில் 72 இடங்கள் வரை கைப்பற்றுவதற்கும் பாஜகவிற்கு உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment