Sep 17, 2013

ரஜினிகாந்த் மோடியை ஆதரிப்பாரா?

பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறியதாவது, ரஜினிகாந்த் நடிப்பு துறையில் சிறந்து விளங்கி இருந்தாலும் கூட, அதற்கு அப்பாற்பட்டு அவருடைய வார்த்தைகளை மதிக்கின்ற ஒரு பெரிய கூட்டம் தமிழகத்திலும், தென் மாநிலங்களிலும் இருக்கிறது..

ரஜினிகாந்த் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்.என்றாலும் சிறந்த தெய்வபக்தி மற்றும் அப்பழுக்கற்ற தேசியவாதி. நாட்டின் நலன் குறித்து அக்கரைபடுபவர். யாரெல்லாம் நாட்டின் நலன் குறித்து அக்கரைப படுகிறார்களோ? அவர்களெல்லாம் இன்றைய பாரதத்தின் நிலை குறித்து கவலைப்படுகிறார்கள். 

அந்தவகையில் தெய்வ பக்தியும் தேச பக்தியும் கொண்டவரும், நாட்டு மக்களை மதிப்பவருமான ரஜினி காந்த் பாஜக வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவளிக்க வேண்டும்  என்ற எனது நம்பிக்கையும், தேச பக்தர்களது நம்பிக்கையும் வீணாகாது என நான் கருதுகிறேன் என்று கூறினார்.

சிந்திக்கவும்: மோடி முதல்வராக இருந்து குஜராத் சந்தித்த மத கலவரங்கள் போதும் இந்தியாவை சுடுகாடாக்க விருப்புகின்றனர் பா.ஜ.க.வினர். மேலும், மோடியை  ஆதரிக்க வேண்டுமா? வேண்டாமா? என்று ரஜினி முடிவு செய்ய முடியாது. அதற்க்கு ‘அம்மா’ அனுமதி வேண்டும் என்பது ரஜினிக்கு தெரியும். ஆனால் இந்த உண்மை இலா கணேசனுக்கு தெரியாமல் போனது என்னவோ  அதிசயம் தான். 

4 comments:

Seeni said...

mmmm....

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

எப்படி இருந்தாலும் மோடி ஜெயிப்பது கஷ்டமே,சிரமமே

என் தளத்தில் இன்று:ஊதா கலரு ரிப்பன்
tvpmuslim.blogspot.com

Anonymous said...

ரஜினிகாந்த் மோடியை ஆதரித்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன ? இங்குள்ள எங்களுக்கே அதைப்பற்றி கவலை இல்லை. இலங்கையில் இருந்து விஷக்கருத்துக்களை பரப்பும் உனக்கு ஏன் கவலை?

உன் வீட்டை முதலில் சீர்படுத்து.இந்தியாவையும் தமிழ் நாட்டையும் பற்றி ரொம்பவே கவளி கொள்ளாதே. உடம்புக்கு ஆகாது.

MGSP said...

Sir,

Can you please let me know how many communal clashes have taken place in Gujarat from 2002 to 2013. People who oppose Modi speaks of one thing-Godra riots. So are they saying that anyone secular can rule India and also can loot in many ways like 2G scam, Commonwealth scam, Coal scam etc???? Also in Gujarat many Muslims have voted for Modi. He is the only replacement for tainted Congress.