ஜூன் 18/2013: ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாரதீய ஜனதா கட்சியுடன் உள்ள உறவை, கூட்டணியை முறித்து கொண்டதாக அறிவித்துள்ளது.
இதை, "பொருந்தாத காதலர்களின் திருமணம் விவாகரத்தில் முடிந்தது" என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் நையாண்டி செய்துள்ளார்.
இந்நிலையில், வரும் 19ஆம் தேதி பீகார் சட்டமன்றத்தில் தனது அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பை கோரும் என முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். முன்னதாக முதலமைச்சர் நிதிஷ் குமார் வீட்டில் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்திய ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் பாஜகவுடன் தாங்கள் கொண்டு வந்த கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவித்தனர்.
நரேந்திர மோடி செய்வது ஆபத்தான அரசியல் என்றும், சமூகத்தில் ஒரு பிரிவினர் மோடி நாட்டின் தலைவராக வருவதை விரும்பவில்லை என்றும் ஐக்கிய ஜனதா தளத் தலைவர்கள் தமது சந்திப்பில் ஒரு மனதாக ஒரு முடிவுக்கு வந்தனர். நரேந்திர மோடிக்கு ஆதரவாக பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் அத்வானியையே ஆர்.எஸ்.எஸ் ஓரங்கட்டியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
1 comment:
உங்களது தளத்தில் அரசியல் செய்திகள் அருமையாக இருந்தது. உங்கள் தளம் மென்மேலும் பல தமிழ் சேவைகள் புரிய எனது வாழ்த்துக்கள். நான் சமீபத்தில் அரசியல் நிகழ்வுகள் குறித்து http://www.valaitamil.com/politics என்ற இணையதளத்தில் உள்ள கட்டுரைகளை படித்தேன் மிகவும் அருமையாக கொடுக்கபட்டிருந்தது.
Post a Comment