May 5, 2013

அரசு பயங்கரவாதம் சாடுகிறார் அருந்ததிராய்!

மே 06/2013: ‘மக்களுக்கு எதிரான போர்’ என்ற தலைப்பில் டெல்லி  ராஜேந்திரபிரசாத் பவனில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் பல்வேறு தரப்பட்ட  சிந்தனையாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.                              
அதில் பேசிய  பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததிராய் காலனியாதிக்க ஆட்சியின் தொடர்ச்சியே இந்திய அரசு பயங்கரவாதம் என்று  கடுமையாக சாடினார்.
1947-ஆம் ஆண்டு இந்திய சுதந்திரமடைந்த வேளையில் காலனி அரசுதான் நாட்டில் அதிகாரத்திற்கு வந்தது. தெலுங்கானா, வங்காளம் உள்ளிட்ட  நாட்டின் எல்லைக்கு உள்ளாகவே ராணுவத்தை அனுப்பி அரசு சொந்த குடிமக்களுக்கு எதிராக போரை நடத்தியது. இவ்வகையான போர்கள் இன்றும் தொடர்கின்றன. 
இந்திய அரசு உயர்சாதி அரசாகும். இந்த அரசின் குணத்தை உலகின் வேறு எந்த அரசுடனும் ஒப்பிட முடியாது. சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் நிலபிரபுத்துவம் மீண்டும் அமல்படுத்தப்படுகிறது.  முந்தைய காலங்களில் நடத்திய சீர்திருத்தங்களின் பலனாக ஏற்பட்ட நலன்கள் கூட பலம் பிரயோகித்து மக்களிடமிருந்து பிடுங்கபடுகின்றன. உண்மையில் நாட்டை ஆள்வது மன்மோகன் சிங் அல்ல. டாட்டா, அம்பானி போன்ற தொழிலதிபர்கள்தான். ஆகையால்தான் முகேஷ் அம்பானிக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பேசிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் இ.எம்.அப்துல் ரஹ்மான் கூறியதாவது, சட்டத்தை அமல்படுத்தும் அரசே அதனை மீறுகிறது. சட்டங்களை இலகுவாக்குவதுடன், கறுப்புச் சட்டங்களையும் அரசே உருவாக்குகிறது. அப்ஸா, யு.ஏ.பி.ஏ, உள்ளிட்ட கறுப்புச் சட்டங்களால் பாதிக்கப்படுபவர்கள் பழங்குடியினரும், தலித்துகளும், தொழிலாளர்களும், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை  மக்களே. இது போன்ற கருப்பு சட்டங்களை நீக்க மனித நேயம் கொண்ட ஒவ்வொருவரும் இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் அவசியம் என்றார்.

2 comments:

Seeni said...

nalla thakaval!

nantri!

Anonymous said...

மட்டக்களப்பு ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் 12 ஆம் திகதி, ஆகஸ்ட் மாதம் 1990 ஆம் கொலை வெறியுடன் பாய்ந்த புலி பயங்கரவாதிகள் 116 முஸ்லிம்களை சுட்டும், வெட்டியும் திட்டமிட்டு படுகொலை செய்தனர். புலிகளின் இந்த கொலைவெறி பிடித்த தாக்குதலில் 60 முஸ்லிம் குழந்தைகள் மரணத்தை சுவாசித்தனர். மானிட குலத்திற்கு எதிராக புலிப் பயங்கரவாதிகள் புரிந்த போர்க்குற்றத்திற்கு இதனையும்விட ஆதாரங்கள் வேண்டுமா..?? இதோ புலிகளின் கொலைவெறிக்கு பலியான குழந்தைகளின் பெயர் வயது மற்றும் விபரங்கள்

1- ஏ. அப்துல் மஜீத் -(1 வாரம்)-ஆண்
2- ஏ. எல். அன்சாரா -(1 மாதம்)- பெண்
3- எம். ஐ. எம். சானாஸ்- (05 மாதம்)- பெண்
4- ஏ. எஸ். பைரூஸ் -(8 மாதம்)- ஆண்
5- எம். ஐ. பர்சான் -(01 வயது)- ஆண்
6- எஸ். சனூஸியா- (01 வயது)-பெண்
7- ஏ. றிபாகா -(01 வயது) -பெண்
8- எச். எம். பஸ்மி -(03 வயது) -ஆண்
9- எம். வை. எம். பசீர் -(03 வயது)- ஆண்
10- யூ. லாபிர் -(03 வயது)- ஆண்
11- எம். ஐ. பர்சானா -(02 வயது)- பெண்
12- ஆர். எப். றம்சியா -(06 வயது)- பெண்
13- எம். எஸ். றம்சுலா- (07 வயது)- பெண்
14- எம். எஸ். சஹீலா- (04 வயது)- பெண்
15- எஸ். எல் நஜீபா -(04 வயது) பெண்
16- எஸ். எல். நஸ்ரின்- (06 வயது) பெண்
17- எம். ஐ. சபீரா -(06 வயது)- பெண்
18- எம். ஐ. எம். தாஹிர்-(06 வயது)- ஆண்
19- எம். எல். எப். றிஸ்னா-(05 வயது)- பெண்
20- எச். எம். ஹிதாயா- (08 வயது)- பெண்
21- எம். எஸ். எம்.அக்ரம்-(6 வயது )
22- எம். எஸ். எம். தல்ஹான்- (08 வயது)
23- எஸ். ஏ. எம். இம்தியாஸ்- (09 வயது)
24- ஆர். எம். சித்தீக் -(8 வயது)- ஆண்
25- ஆர். எப். றம்சியா -(6 வயது)- பெண்
26- எம். சீ. எம். றிஸ்வான் -(10 வயது)
27- எம். ஐ. ஜரூன் -(10 வயது)
28- எஸ். செய்யது அஜ்மல் -(10 வயது)
29- எம். ஐ. அஸ்றப் -(11 வயது)
30- எம். ஐ. எம். ஆரிப் -(12 வயது)
31- எம். கமர்தீன் -(12 வயது)
32- எம். ஐ. எம். அஜ்மல்- (12 வயது)
33- ஏ. எல். மக்கீன்-(12 வயது)
34- எம். எஸ். எம். பௌசர் -(12 வயது)
35- ஏ. எல். அபுல்ஹசன்- (12 வயது)
36- வை. எல். எம். ஹரீஸ்- (12 வயது)
37- எம். எஸ். எம். ஜவாத்- (13 வயது)
38- எம். எஸ். பைசல்-(13 வயது)
39- எம். பீ ஜவாத்- (13 வயது)
40- யூ. எல். எம். அனஸ்- (13 வயது)
41- ஏ. எல் அப்துல் சமத்-(14 வயது)
42- எச். எம். பௌசர்-(14 வயது)
43- ஏ. ஜௌபர்- (14 வயது)
44- எம். எஸ். எம் சகூர் -(14 வயது)
45- ஏ. சமீம்- (14 வயது)
46- எம். இஸ்ஸதீன்- (15 வயது)
47- எம். எம். எம். பைசல் -(15 வயது)
48- எம். எஸ். ஜிப்ரியா -(12 வயது) பெண்
49- எம். எஸ். றமீஸா-(10 வயது)-பெண்
50- எம். பீ. சரீனா-(14 வயது)- பெண்
51- எம். பீ. ஹபீபா- (12 வயது)- பெண்
52- எஸ். எம். அஸ்மி -(11 வயது)-ஆண்
53- எம். எல். சமீமா-(10 வயது)- பெண்
54- எம். எஸ். ஐதுரூஸ் -(11 வயது) ஆண்
55- எல். நயிமுதீன் -(12 வயது)- ஆண்
56- ஏ. எல். பாத்தும்மா-(10 வயது)-பெண்
57- ஜே. எம். நௌபர்-(11 வயது ) -ஆண்
58- யூ. எல். ஏ. சதார்- (13 வயது)- ஆண்
59- ஆர். ஹிதாயா-(10 வயது)- பெண்
60- ஏ. எல் சமீர்-(10 வயது) -ஆண்