ஏப்ரல் 12/2013: மும்பையில் 36 போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் காட்சி படம் பிடிக்கப்பட்டு வெளியானதை தொடர்ந்து அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை போலீசார் குர்லா பகுதியில் உள்ள நேரு நகரில் பல்வேறு இடங்களில் லஞ்சம் வாங்குவதை சமூக நல ஆர்வலர் காசிம் கான் என்பவர் ரகசியமாக கேமராவில் பதிவு செய்துள்ளார்..
இதை காசிம் கான் காவல்துறை ஆணையர் சத்யபால் சிங்கிடம் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து 36 போலீஸாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து லஞ்ச ஒழிப்பு பிரிவு மூலமும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சிந்திக்கவும்: தனி நபராக 36 போலீஸ் அதிகாரிகளின் லஞ்ச லாவண்யத்தை வெளிக்கொண்டு வந்த காசிம் கானின் முயற்சி பாராட்டத்தக்கது. லஞ்சத்தை ஒழிக்கிறோம் பேர்வழி என்று சொல்லும் அரசியல் கட்சிகளும் தனி நபர்களும் இதுபோன்று லஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் துணிந்து இறங்க வேண்டும்.
இதை தமிழகத்திலும் மக்கள் கடைபிடிக்க வேண்டும். இப்பொழுது ஸ்பை (SPY) கேமராக்கள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. ebay.com மற்றும் amazon.com போன்றவற்றில் 800 முதல் 2000 ரூபாய்க்குள் வாட்ச், பேனா, கோர்ட் பட்டன், டைம் பீஸ், சன் கிளாஸ், கி செயின் போன்ற மாடல்களில் spy கேமராக்கள் கிடைகின்றன. இதை வாங்கி மக்கள் உபயோகிக்கலாம்.
ஒவ்வொரு மனிதனும் ஒரு மாதத்தில் குறைந்தது ஒரு முறையாவது ஏதாவது ஒரு வகைக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் இந்தியாவில் நிலவி வருகிறது. அந்த அளவுக்கு லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இப்படி லஞ்சம் வாங்கும் லகட பாண்டிகளை spy கேமராக்கள் மூலம் படம் பிடித்து தண்டனை வாங்கி கொடுத்தால் ஏழை மக்கள் லஞ்ச கொடுமையில் இருந்து சிறிதளவாவது விடுபடுவார்கள்.
இயக்கங்கள், சமூக நல அமைப்புகள் இதுபோன்ற கேமராக்களை வாங்கி வைத்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு குடுத்து லஞ்சத்தின் மூலம் வறுமையில் இருக்கும் மக்களையும் கொடுமை படுத்தும் லகட பாண்டிகளை பிடிக்க உதவலாம்.
4 comments:
இந்த காமிராவை வைத்து எப்படி தவறு செய்யலாம் என்று யாரும் சிந்திக்காமல் இருந்தால் சரி!
mmm...
ANNONY SOLVATHUM SARITHAAN.
இயக்கங்கள், சமூக நல அமைப்புகள் இதுபோன்ற கேமராக்களை வாங்கி வைத்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு குடுத்து லஞ்சத்தின் மூலம் வறுமையில் இருக்கும் மக்களையும் கொடுமை படுத்தும் லகட பாண்டிகளை பிடிக்க உதவலாம்.
Post a Comment