மார்ச் 01/2013: ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சாமி 28.02.2013 அன்று இலங்கை அதிபரும், போர்க் குற்றவாளியுமான மஹிந்த ராஜபக்சேவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஹிந்துத்துவா சுப்பிரமணிய சுவாமி சிங்கள பேரினவாத பயங்கரவாதியை சந்தித்தார். இந்த சந்திப்பில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சேவும் கலந்து கொண்டார்.
ஜெனிவாவில் நடக்கவிருக்கும் ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில், இலங்கையில் நடந்த மனித உரிமைகள் மீறல் தொடர்பாக ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் குரல் எழுந்துள்ளது. பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலை குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், ராஜபக்சேவை போர்குற்றவாளியாக அறிவித்து நடவடிக்கை எடுப்பதற்கு சுப்பிரமணிய சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஈழத்து இனப்பிரச்சனை முதல் கூடங்குளம் அணு உலை மற்றும் சேது சமுத்திர திட்டம் வரை உள்ள அனைத்து தமிழர் பிரச்சனைகளிலும் தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டு வந்தார் சுப்பிரமணிய சுவாமி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஒருபுறம், ஹிந்துத்துவா இயக்கங்கள் ஓட்டு பொருக்க தமிழர்களுக்கு ஆதரவாக வெங்கையா நாயுடு போன்றோரை வைத்து அறிக்கை அரசியல் நடத்துகிறார்கள். மறுபுறம் சுஸ்மா சுவராஜ் போன்ற தலைவர்களை வைத்து ராஜபக்சேவை இந்தியாவில் நடந்த புத்தர் விழாவுக்கு அழைப்பு விடுத்தார்கள். ஆரம்பம் முதல் ஈழ விடுதலை போராளிகளை தீவிரவாதிகள் என்று சொல்லி வந்ததில் காங்கிரசுக்கு இணையாக ஹிந்துத்துவா இயக்கங்களுக்கும் பங்குண்டு.
ஜனதா கட்சி போர்வையில் ஒளிந்து கிடக்கும் ஹிந்துத்துவா சிந்தனைவாதி சுப்பிரமணிய சுவாமியை, ராஜபக்சேவை சந்திக்க வைத்திருப்பதன் மூலம் ஹிந்துதுவாவின் இரட்டை முகம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
1 comment:
இதற்கு ஒரே வழி... தமிழ் நாடு இந்தியாவில் இருந்து உடைய வேண்டும்... வேண்டாம்... இந்திய நம் தமிழரை வேண்டாம் என்று நினைகிறது.. இதே தான் இலங்கை தமிழர்களுடன் பணிந்தால் போர் வெடித்தது, நினைவில் கொள்ளுங்கள்..
Post a Comment