பிப் 25/2013: சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த விஜயபாஸ்கர் என்ற இளைஞர் அதே பகுதியில் இண்டர்நெட் சென்டரில் வேலை பார்த்து வந்த வித்யா என்கிற பெண் மீது கொண்ட ஒருதலை காதலால் கொண்டார்.
தன்னுடைய காதலை ஏற்றுக்கொள்ளும்படியும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் வித்யாவை வற்புறுத்தி வந்தார். ஆனால் வித்யாவிற்கு அவர் மீது காதல் எதுவும் வரவில்லை. அதனால் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்தார்.
இதனால் கோபம் கொண்ட விஜயபாஸ்கர் வித்யா மீது ஆசிட் வீசினார். இதனால் கடுமையான முறையில் காயம் அடைந்த வித்யா சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் சிகிட்ச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிந்திக்கவும்: ஒருதலை காதலால் சமீபத்தில் வினோதினி மீது ஆசிட் வீசி அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். அதை தொடர்ந்து ஒரு வார காலத்திற்குள் வித்யா என்கிற பெண் பலியாகி இருக்கிறார். இது ஒருவகைய மனோ வியாதி, காதலை புரிந்து கொள்ளாத காட்டு மிராண்டிகளின் செயல்.
காதல் ஒரு சுகமான உணர்வு. ஷாஜகான் மும்தாஜ் மீது கொண்ட காதலால் தாஜ்மஹால் கட்டினார். இப்படி தான் கொண்ட காதலுக்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் உயிரை துறந்த காதலர்களும் உண்டு?
காதலுக்கு மரியாதை கொடுங்கள்! காதலி மீது அன்பு கொள்ளுங்கள். அவர்கள் உங்களை ஏற்று கொள்ளவில்லை என்பதால் அவர்களை துன்பப்படுத்துவது எந்த விதத்திலும் நாகரிகமில்லாத செயல். காதல் என்பது இயல்பா உண்டாக வேண்டும். அதை பிச்சை கேட்டு வாங்க கூடாது.
ஒரு பெண்மீது காதல் கொள்வது ஆண்களது உரிமை என்றால்! அதை ஏற்று கொள்வதும் ஏற்று கொள்ளாததும் பெண்களது உரிமை! காதல் தானாக வரணும் அதை விட்டு என்னை காதலி என்று கெஞ்சுவதும், நீ என் காதலை ஏற்று கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று சொல்வதும், அயோக்கியத்தனமான செயல். எதுவும் இயற்கையா நடக்கணும் அதுதான் உண்மையானதும் கூட.
ஒருத்தரை பார்த்து, பழகி இருவர் மனதுக்கும் பிடித்து வருவதுதான் உண்மையான அன்பு, காதல். நாம் ஒரு பெண்ணை காதலிக்கிறோம்! நமது காதல் நிறை வேற வில்லை! என்றாலும் அந்த பெண் சந்தோசமாக வாழ்வதை பார்த்து மகிழ்ச்சி அடைய வேண்டும். எங்கிருந்தாலும் வாழ்க! உன் இதயம் அமைதியில் வாழ்க! என்று வாழ்த்த வேண்டும். அதை விட்டு இதுமாதிரி கொலை வெறி செயல்களில் ஈடுபட கூடாது. இளஞசர்கள் சிந்திப்பார்களா?
*மலர் விழி*
4 comments:
காதல் ரசனையாதான் எழுதுறீங்கள்... தோழி நீங்கள் காதல் திருமணமா?
காதலும் ஒரு உணர்வு... அவ்வளவே...
காதல் செய்தோன்றுபவன் தயங்காமல் சொல்ல வேண்டும் சொல்லிவிடுவான்காமக்கண் உள்ளவன் தனியாக தொடருவான் ஜாக்கிரதைபெண்களே
I love your Article Malarvizhi
Post a Comment