Jan 11, 2013

இந்திய அரசியலில் கிரிமினல்களுக்கு முதலிடம்! ஏன்?

Jan 12: வரப்போகும் பார்லிமென்ட் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் நிச்சயம் போ்ட்டியிட முடியாதபடி உடனடியாக தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் கமிசன் தெரிவித்துள்ளது.
 
சட்டசபை மற்றும் பார்லிமென்ட் தேர்தல்களில் கிரிமினல் குற்றவாளிகள் போட்டியிட தடைவிதிப்பது குறித்து தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வருவது  தொடர்பாக கடந்த 1998-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதியில் இருந்து தலைமை தேர்தல் கமிஷன் மத்திய அரசிடம் எழுத்து மூலமாக வலியுறுத்தி வந்தது. ஆனால் இந்த கோரிக்கை அநியாயத்திற்கு 15 வருடங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
 
இந்த கோரிக்கையை நிறைவேற்ற மத்தியில் ஆட்சி செய்த எந்த கட்சிக்கும் துணிவில்லை என்றே சொல்லலாம். மத்தியை ஆண்ட பாரதிய ஜனதா, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் கிரிமினல்களின் கூடாரமாகவே விளங்கின. அது போன்று மாநில கட்சிகளில் கிரிமினல்களின் எண்ணிக்கைக்கு அளவே இல்லை. முன்னொரு காலத்தில் அரசியலுக்கு நல்லவர்கள் மட்டுமே வர முடியும்.
 
ஆனால் இப்பொழுது அரசியலுக்கு வர கட்ட பஞ்சாயத்து, ஆள்கடத்தல், ரவுடிசம் இவை எல்லாமே முக்கிய தகுதிகளாக கருதப்படுகின்றது. பேருக்கு சில பேராசிரியர்களையும், பொருளாதார நிபுணர்களையும் வைத்து கொண்டு வெளி அலங்காரத்துக்கு காட்டி கொண்டாலும் கட்சியின் அட்சாணியாக கிரிமினல்களே இருகின்றனர். இதுதான் இன்றைய இந்தியாவின் அரசியல் என்றாகி விட்டது.

கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் தேர்தல்களில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என ‌கோரிக்கை நாடு முழுவதும் எழுந்துள்ளது வருவதால்  கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள், மாநில சட்டசபை, பார்லிமென்ட் லோக்சபா தேர்தல்களில் போட்டியிட தடைவிதிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்கள், மற்றும் பார்லிமென்ட் எம்.பி.க்கள் பலர் மீது கொலை, ஆட்கடத்தல், கற்பழிப்பு உள்ளிட்ட கிரிமினல் வழக்குகள் இருப்பதாக புகார்கள் வந்துள்ளது. இவர்களில் சிலர் மீது வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
 
*மலர் விழி*

2 comments:

தமிழ் காமெடி உலகம் said...

பகிர்வுக்கு மிக்க நன்றி....."உங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....."

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/

PUTHIYATHENRAL said...

வணக்கம் மலர் உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.