பல்வேறு உலக நாடுகளை சுற்றி வந்த சென்னை ஆலன்தூரை சேர்ந்த வியாபாரி ஒருவர் வருத்தாமாக தெரிவித்த சில செய்திகளை வாசகர்களுக்கு பதிவாக தருகிகிறோம்.
ஆர்ச்சி வளைவு, சாப்புக்கடை, நடு சென்டர் போன்ற வார்த்தைகள் தமிழகத்தில் சர்வசாதாரணமாக புழங்கி வருகிறது. ARCH என்றாலும் வளைவு என்றாலும் ஒன்றுதான், SHOP என்றாலும் கடை என்றாலும் ஒன்றுதான், அதைப்போல CENTER என்றாலும் நடு என்றாலும் ஒன்றுதான்.
இப்படி தமிழில் பல வார்த்தைகள் அர்த்தம் தெரியாமல் வழக்கு சொல்லில் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த தவறை படித்தவர்களும் செய்கிறார்கள் படிக்காதவர்களும் செய்கிறார்கள். இந்த நண்பர் தமிழில் இதை போன்று புழக்கத்தில் உள்ள வார்த்தையை வெளிநாடுகளில் பயன்படுத்தி பெரும் அவதிக்குள்ளானார்.
அவதி 1). இவர் தலைவலி மருந்து வாங்க மெடிகல் ஷாப் எங்கே இருக்கிறது என்று பல பேரிடம் விசாரித்து விட்டார் அவர்கள் அப்படி ஒன்றே இங்கே கிடையாது என்று சொல்லி விட்டார்கள். நண்பருக்கு பெரிய அதிர்ச்சி மெடிக்கல் ஷாப் இல்லாத ஊருக்கா நாம் வந்து விட்டோம் என்று குழம்பிவிட்டார். பின்னர்தான் அவருக்கு தெரிந்தது மெடிக்கல் ஷாப் என்று நாம் சொல்வது தவறு அதை பார்மசி என்று சொல்ல வேண்டும்.
அவதி 2). அதுபோல் நண்பர் தனது கடவு சீட்டை பிரதி எடுப்பதற்காக பலரிடமும் ஜெராக்ஸ் எடுக்கும் இடம் எங்கே என்று விசாரித்துள்ளார் அதற்க்கு அவர்கள் ஜெராக்ஸ் எடுக்கும் இடமா! அப்படி ஒரு இடமும் இங்கே கிடையாதே, அப்படி ஒன்றை தாங்கள் கேள்வி பட்டதே இல்லையே! என்று சொல்லிவிட்டார்கள். நண்பருக்கு மீண்டும் குழப்பம். பின்னர் வெகுநாட்களாக அங்கே வசிக்கும் தமிழர் ஒருவரிடம், ஜெராக்ஸ் என்பதற்கு போட்டோ காப்பி என்பதுதான் சரியான ஆங்கிலம் என்பதை கேட்டு தெரிந்து கொண்டார்.
இப்படி தமிழில் பல சொற்களை சொல்லலாம் WINE SHOP இதை சரியாக சொல்ல வேண்டும் என்றால் லிக்கர் ஷாப் என்றுதான் சொல்ல வேண்டும். அதுபோல் ஆணுறைக்கு (காண்டம் - Condom ) நிரோத் என்று அதன் கம்பெனி பெயரை சொல்லி அழைப்பது இப்படி அடுக்கி கொண்டே போகலாம். இதை போன்ற சொல் வழக்குகளை விட்டு மக்களும், அரசும் திருந்த வேண்டும்.

1 comment:
நல்ல தகவல்
Post a Comment