Dec 13, 2012

நான் அரசியலுக்கு வருவது யார் கையில்!


1) சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா கூட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ரஜினி ‘’அரசியல் தலைவர்கள் எல்லோரும் என்னிடம் நல்லவர்களாக பழகுகிறார்கள். என் மேல் அன்பு வைத்திருக்கிறார்கள்.
 
நமது அரசியல்வாதிகள் ஓட்டு பொருக்க குஸ்புவிடமே அன்பு செலுத்தும் போது தங்களிடம் அன்பு செலுத்துவதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது..

2) என் மேல் கலைஞர் மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறார். அதே மாதிரி புரட்சித்தலைவியும் அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார். பொதுவாகவே அரசியல் தலைவர்கள் நல்லவர்கள்தான். தொண்டர்கள்தான் தங்களது சுயநலத்திற்காக விஷமங்கள் செய்கிறார்கள்.

நமது அரசியல் தலைவர்களை நல்லவர்கள் என்று சொன்ன உங்கள் அறிவு முதிர்ச்சியை புகழாமல் இருக்க முடியவில்லை. கடைசியில் அப்பாவி தொண்டர்களை பார்த்து சுயநலக்காரர்கள், விசமிகள் ன்று சொல்லி உங்கள் அதிமேதாவித்தனத்தை நிருபித்திருக்கிறீர்கள்.

3) தலைவர்களை மோதவிட்டு, நல்ல காரியங்களை செய்யவிடாமல் செய்துவிடுகிறார்கள். நான் அரசியலுக்கு வந்தாலும் இதே மாதிரிதான் நடக்கும். கீழே இருப்பவர்கள் விஷமத்தனம் செய்துவிடுவார்கள். ஆனால் நான் அரசியலுக்கு வருவது என் கையில் இல்லை’’ என்று தெரிவித்தார்.

நம்ம அரசியல்வாதிகள் அப்பழுக்கற்ற கொள்கை குன்றுகள் அவர்களை தொண்டர்கள் மோதவிட்டு வேடிக்கை பார்க்க. நம்ம அரசியல்வாதிகளில் நிறையபேர் ரவுடிகள் என்று ரஜனிக்கு தெரியாதா? இவர் அரசியலுக்கு வந்தாலும் அப்படித்தான் நடக்குமாம், தேர்ந்த ஜோதிடர் போல் ஆருடம் கூறுகிறார். இவர் அரசியலுக்கு வருவது எந்த சாமியார் கையில் இருக்கோ.தெரியலை. இப்படி  அரைவேக்காட்டு தனமான பேசும் இவரைத்தான் தலைவரே! தெய்வமே! என்று கொண்டாடுகிறது ஒரு கோமாளி கூட்டம்.

5 comments:

Seeni said...

kodumai sir...

Unknown said...

தமிழகத்தில் மட்டுமே உன்னைப்போன்றவர்கள் கூத்தாடிகன் அரசியலுக்கு வர முடியும். அன்டை மாநிலமான கேரள காரர்கள் நம்மை பார்த்து சிரிக்கிறார்கள். சினிமா நடிகன் தான் தமிழ்நாட்டில் ஆட்சிக்க வரமுடியும் என்கிறான் ஒரு மலயாளி. இது கேவலம் இல்லையா? நாம் எப்போது திருந்துவோம்?

Unknown said...

நீங்கள் உங்கள் தொண்டனை அடித்து விரட்டிய ராமதாஸ் மகன் அன்புமனியய் தன் மகள் திருமண விழாவில் வைத்து அழ்கு பார்த்தவர் தானே இந்த தானை தலைவர் முட்டால் தொண்டன் தெருவில் அல்லவா கத்துக்கிடந்தான்

Anonymous said...

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் டிக்னிட்டி ஆஃப் வொர்க் என்ற பாடப்பி‌ரிவில் ர‌ஜினியின் வாழ்க்கை வரலாறை பாடமாக வைத்துள்ளனர். கண்டக்டராக இருந்த ர‌ஜினி எப்படி இவ்ளோ பெ‌ரிய ஆளாக மாறினார் என்பதை படித்து மாணவர்களும் பெ‌ரிய நடிகராக... ஸா‌ரி பெ‌ரிய ஆளாக இந்தப் பாடத்தை வைத்துள்ளனர்.

கக்கன், காமராஜர், பெ‌ரியார் இவங்களையெல்லாம் நாடு கடத்திட வேண்டியதுதான்.

எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது ....என்ன கொடும சார்.....

ruban said...

உண்மை...