Dec 12, 2012

தலைவா! தமிழகத்தைக் காப்பாற்று!


Dec 12: எங்கு திரும்பினாலும் ரஜனிமாயை! தமிழ் மக்கள் திருந்த மாட்டார்களா? தமிழர்களை ஆட்டிபடைக்கும் சினமா மோகம், குஷ்புக்கு கோவில் கட்டும் வரை கொண்டு சென்றது.

ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மொட்டை போடுகிறார்கள், அலகு குத்துகிறார்கள், மண் சோறு சாப்பிடுகிறார்கள். மக்கள் பிரச்சனைகள் பல்லாயிரக் கணக்கில் கொட்டி கிடக்க, மானம் கெட்ட பத்திரிக்கைகள், இணையதளங்கள் திரும்பிய பக்கமெல்லாம் செய்தியாக வெளியிட்டார்கள்.

இன்று ரஜினியின் பிறந்தநாள் அதற்க்கு வாழ்த்து சொல்கிறோம் பேர்வழிகள் என்று சொல்லி, ரஜினியைத் தலைவா! என்றும், தெய்வமே! என்றும் தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள். கன்னட நடிகர் ராஜ்குமாருக்குக் குரல் கொடுத்த ரஜினி, காவிரிக்குக் குரல் கொடுக்காதது ஏன்? என்று கேட்டால், அவர் அரசியல்வாதி கிடையாது, நடிகர்” என்கிறார்கள். பின்னர் ” தலைவா, தமிழகத்தைக் காப்பாற்று என்றும் சொல்கிறார்கள்..

தமிழ் ஈனத்தலைவர் கருணாநிதி குடும்பமும், மற்றைய அரசியல் ஒட்டு பொறுக்கி அரசியல்வாதிகளும் வாழ்த்து சொல்ல, மக்கள் பிரச்சனிகளை காட்டாத தொல்லை காட்சிகள் புகழ்பாட, மக்கள் பிரைச்சனைகளை எழுதாமல் நடிகைகளின் கிசு, கிசு மற்றும் தொப்புள்களை படம் பிடித்து தோல் வியாபாரம் செய்தும் பத்திரிக்கைகளின் துதி பாடல்களோடு, பக்த கோடிகளின் ( ரசிகர்கள்) பாலபிசேகம் மற்றும் போஸ்டர் யுத்தங்களோடு  இனிதே நிறைவு பெற்றது.
.
தாழ்ந்து போன தமிழனமே! கஞ்சிக்கு மக்கள் அவதிப்படும் நாட்டில், காவிரிக்கு உழவன் கண்ணீர் விடும் மண்ணில், அடிப்படைதேவைக்கு மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிக்கிடக்கும் ஒரு நாட்டில், பெரும்பகுதி மக்களுக்கு கழிப்பறை வசதி கூட இல்லாத ஒரு தேசத்தில் கூத்தாடிகளுக்கு எதற்க்கடா (பிறந்தநாள் கொண்டாட்டம்) கும்மாளம்! தமிழனே! உனக்கு சூடு, சொரணை இல்லையா! ரஜினியின் பிறந்தநாள் செய்திகள் மூலம் பத்திரிக்கைகளை, இணைய தளங்களை நிறைத்திருக்கும் மானம் கெட்டவர்களே திருந்துவீர்களா?

தொடர்புள்ள இடுகை படிக்கவும் : படையப்பா........ படுத்திரியப்பா!!!!
*மலர் விழி*

6 comments:

Anonymous said...

இதே ரஜினிகாந்த் முல்லை பெரியாருக்கு ஆதரவு தெரிவிக்க வில்லை, காவேரி நதி நீர் விசயத்தில் பாசாங்கு செய்து நடித்தார், ஈழமக்கள் படுகொலையில் மவுனம், தமிழக மீனவர்கள் படுகொலையில் மவுனமோ மவுனம், கூடங்குளம் அனுமிநிலயம் விசயத்தில் நீண்ட மவுனம்

Anonymous said...

இப்படிப்பட்டவர்தான் தமிழகத்தின் விடிவெள்ளி, நிறைய பேருக்கு கடவுள், சில பேருக்கு கடவுளை விட மேலானவர் என்றும் அழைக்கப்படுகிறார். இப்படி இவரை அழைக்கும் அறிவை அடகு வைத்த சினிமா பைத்தியங்கள் தங்கள் தாய், தந்தை, உறவினர்கள் இவர்களில் பலபேர் நோய்வாய் பட்டவர்களாக இருப்பார்கள் அல்லது பரம ஏழையாக ஒருவேளை சாப்பாடுக்கு வழியில்லாமல் இருப்பார்கள் அவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள்.

ஆனால் ரஜினி படம் வெளியானதும் கட் அவூட்க்கு மாலை, பால் அபிசேகம், முதல் நாள் படத்தை பார்க்க பலநூறு ரூபாய்கள் செலவு என்று அமர்களம் செய்வார்கள். அதுமட்டும் இல்லை அந்த படத்தை நூறு நாள் ஓடவைக்க இவர்களே தினம்தினம் அந்த படத்தை பார்த்து செஞ்சுரி அடிப்பார்கள். ரஜினியை கடவுள் என்று சொல்பவர்கள் அப்பாவிகள், படிப்பறிவு இல்லாத மக்கள் என்று நீங்கள் எண்ணிவிட கூடாது இதை சொல்பவர்களில் நிறைய படித்த முட்டாள்களும் உண்டு.

Seeni said...

nalla. sonneenga....

Easy (EZ) Editorial Calendar said...

மிக மிக சரியாக சொன்னிங்க...ஆனாலும் நம்ம மக்கள் திருந்தவே மாட்டங்க.....பட்டு திருந்த கூடியவர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புத்தி வராது.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Unknown said...

"சி.பி.எஸ்.இ பாட நூலில் ரஜினிகாந்த் வாழ்க்கை பாடம்" http://www.inneram.com/news/tamilnadu-news/rajnikanth-in-cbse-standard-6th-text-books-7237.html


இது ஒரு கெட்ட முன்னுதாரமாகும். மக்களை மேலும் சினிமாவின் பக்கம் ஈர்க்கும், இளைய சமுதாயத்தை வழிகெடுக்கும் செயலாகும்.

உழைப்பால் உயர்ந்த எத்தனையோ பேர் நாட்டில் இருக்க ஒரு சினிமா கூத்தாடியை முன்னுதாரனமாக மாணவர்களுக்கு காட்டுவது. மாணவர்களை வழிதவறச்செய்யும்.

இதை மாற்ற, அகற்ற உடனே சமூக ஆர்வளர்கள் பாடுபடவேண்டும்.

இது ரஜினிக்கு எதிரான கருத்து அல்ல மாறாக இந்த துறையைச்சார்ந்த யாராக இருந்தாலும் இநத முடிவு தவறாகும்.

சினிமா கூத்தாடிகளை நாம் ஆட்சியில் அமர்த்துவதால் ஏற்படும் தீய விளைவாகும் இது.

Anonymous said...

தமிழன் தரம் கெட்டு தாழ்ந்து கிடப்பதற்கு இந்த சினிமா மோகமும் ஒரு முக்கிய காரணம். என்னதான் தலைகீழாய் நின்றாலும் இந்த மக்கள் திருந்தப் போவதில்லை. மேலும் மேலும் அவமானப்படுவதையும் அடிமைப்படுவதையும் தவிர.