Nov 29, 2012

தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுத்த பாரதிய ஜனதா முதல்வர்!


Nov 30: உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, காவிரி நதி நீர் பங்கீட்டுப் பிரச்னை தொடர்பாக தமிழக, கர்நாடக முதல்வர்கள் இடையே பெங்களூரில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என்று கர்நாடகம் கைவிரித்துவிட்டது.

குறுவை நெல் சாகுபடியை இழந்துள்ள நிலையில், சம்பா நெல் சாகுபடிக்காக தமிழக விவசாயிகள் காத்திருக்கின்றனர். பாசனத்துக்கு போதுமான தண்ணீர் இல்லாததால் மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் சம்பா நெல் சாகுபடியையும் இழக்க நேரிடும்.

சம்பா நெல் சாகுபடியைக் காப்பாற்ற வேண்டுமானால், அடுத்த 65 நாள்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். ஆனால், மேட்டூர் அணையில் இதற்கான தண்ணீர் இருப்பு இல்லை. இந்த நிலையில், கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடாவிட்டால், பயிர் கருகி, பேரிடர் நிகழும் அபாயம் உள்ளது.

தமிழகத்தின் நிலை மற்றும் தண்ணீர் தேவையை கர்நாடக BJP முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரிடம் விளக்கப்பட்டது. சம்பா நெல் சாகுபடியைக் காப்பாற்ற அடுத்த 15 நாள்களில் குறைந்தபட்சமாக 30 டிஎம்சி தண்ணீரை திறந்து விடுமாறு கோரப்பட்டது. தமிழகத்தின் கோரிக்கையை செவிமடுக்காத கர்நாடக BJP முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தர முடியாது என்று கூறிவிட்டார்.

சிந்திக்கவும்: எங்கே போனார்கள் தமிழக ஹிந்துதுவாவும், ஆர்.எஸ்.எஸ். இயக்கமும், பாரதிய ஜனதாவும், ராமகோபால ஐயரும், சுப்பிரமணிய சுவாமி, சோ, தினமலர் வைராக்கள் போன்றோர், தமிழர்கள் எல்லாம் இந்துக்கள் இல்லையா? தமிழகத்தை ஆள்வது பார்பன ஜெயாதானே. அப்படி இருந்தும் இரக்கம் இல்லையா?

கர்நாடகாவின் இந்த போக்கை எதிர்த்து தமிழக ஹிந்துத்துவாவினர் போராட்டம் நடத்துவார்களா? மின்சாரத்திற்காக அணு உலை வேண்டும் என்று கூப்பாடு போடும் ஹிந்துத்துவா, விவசாயத்திற்கு தண்ணீர் வேண்டும் என்று ஏன் கூப்பாடு போடுவதில்லை? கட்சி நடத்த தமிழன் வேண்டும், ஆட்சியை பிடிக்க தமிழன் ஓட்டு வேண்டும் மற்றபடி தமிழனுக்கு ஒருபிரச்சனை, தேவை என்றால் ஒரு மாநிலமும் உதவ முன்வராது.

7 comments:

Anonymous said...

உங்களை மிகவும் பாராட்ட வேண்டும். எதை எங்கே முடிச்சு போடுகிறிர்கள், கர்நாடகாவில் முஸ்லிம்களும்தான் தமிழகத்துக்கு எதிராக போராடினார்கள். சரியான மத வெறி புடித்த ஆளுயா நீர். முதலில் நீ சிந்திக்கவும். அந்த அல்லா உனக்கு நல்ல புத்தியை தரட்டும்.

Anonymous said...

Congress irrukkum podhu maattum thanni kidacha mathri pesringa boss...Idhu Madha prathana illa naalla purinchukanga!!!Shiya, Sunni Muslim modhikittu irrukkrangale Adha pathi konjam ezthulame. Eppavum namma mudhugla irrukkarathu namakku theriayarathu illa!!!!!

PUTHIYATHENRAL said...

.**** எதை எங்கே முடிச்சு போடுகிறிர்கள்****

அன்புள்ள அனானி வாசகரே வணக்கம் சரியான கேள்விதான் ஏன் என்றால் ஒரே தேசியம், பாரத மாதாகே ஜெ, இந்தியாவில் உள்ள ஹிந்துக்களை ஒரே தலைமையின் கீழ் கொண்டுவந்து இந்தியாவில் ஹிந்து ராஷ்டிரம் ஏற்ப்படுத்த போகிறோம் என்று இந்த விஞ்சான யூகத்தில், உலகம் முழுதும் ஜனநாயகம் மலர்ந்து உள்ள நேரத்தில் இப்படி சொல்லி திரிவது யார்? ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா கட்சி தானே அவர்களுக்கு தார்மீக பொறுப்பு இருக்கிறதா இல்லையா? தமிழகத்தில் இருக்கும் மக்கள் நமது சகோதரர்கள் என்று எண்ணம் வேண்டுமா இல்லையா?காங்கிரஸ்காரன், கம்புனிஸ்ட்காரன் ஹிந்துக்களுக்கு எதிரானவன் அதனால் அவன் ஆட்சி செய்தால் தண்ணீர் தர மாட்டான். ஆனால் இப்போ கர்நாடகாவை ஆள்வது பாரதிய ஜனதா கட்சிகாரன்தானே. தமிழக தரப்பில் இருந்து பயிர்கள் வாடி விவசாயம் அழிந்து போகும் சூலழலில் ஒரு மாதத்திற்கு தண்ணீர் கேட்டால், ஒரு நாளைக்கு தண்ணீர் தருகிறேன் என்று சொல்லு அதை விட்டு ஒரு சொட்டு தண்ணீர் தர மாட்டேன் என்று சொல்வது நியாயமா? சாதாரண காலத்திலேயே இப்படி இருக்கிறதே ஏதாவது பஞ்சம் வந்தால் ஒருத்தரை வெட்டி ஒருத்தர் ரெத்தம் குடிக்க தயங்க மாட்டார்கள்.

PUTHIYATHENRAL said...

**சரியான மத வெறி புடித்த ஆளுயா நீர்** முதலில் நீ சிந்திக்கவும்**

வணக்கம் அனானி தோழரே. உங்களுக்கு கருத்து சுதந்திரம் உண்டு சிந்திக்கவும் இணையத்தையும், ஆசிரியர்களை பற்றியும் திட்டுவது இது முதல் முறையில்லை. திட்டுங்கள் பரவாயில்லை. நாங்கள் எந்த மதத்தையும் சார்ந்தவர்கள் இல்லை. கருத்தில் இருக்கும் நியாயத்தை மத சாயம் பூசி மறுக்க வேண்டாம். உண்மைகளையும் நியாயங்களையும் எடுத்துரைப்பதே எங்களது நோக்கம்.

PUTHIYATHENRAL said...

***Idhu Madha prathana illa naalla purinchukanga***

அன்புள்ள அனானி அவர்களுக்கு வணக்கம். இதை மத பிரச்சனை என்று நாங்கள் குறிப்பிட வில்லை. ஒரே தேசியம், பாரத மாதாகே ஜெ, இந்தியாவில் உள்ள ஹிந்துக்களை ஒரே தலைமையின் கீழ் கொண்டுவந்து இந்தியாவில் ஹிந்து ராஷ்டிரம் ஏற்ப்படுத்த போகிறோம் என்று சொல்லும் பாரதிய ஜனதாவுக்கு தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்கிற நியாயம் புரியவில்லையா? ஹிந்து ராஷ்டிரத்தில் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னோர் மாநிலத்துக்கு தண்ணீர் கொடுக்கா விட்டால் எப்படி? பாரதிய ஜனதா கட்சியை மதவாத கட்சி இல்லை என்று சொல்வதுதான் வியப்பாக இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியை பற்றியே இங்கே விமர்சனம் எழுப்பப்பட்டுள்ளது. நாங்கள் எப்பொழுதும் சாதாரண பொதுமக்கள் பக்கமே.

PUTHIYATHENRAL said...
This comment has been removed by the author.
Unknown said...

hear wher is hindiduva the main problme is with tamiliens and kannadians thats all dont link this with community
the community was ded already in 1970s hear in south their is only language state