Nov 29, 2012

கீற்று நந்தனுக்கு பதிலளிப்பாரா சீமான்?


Nov 30: சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு, கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு என்று பெரியார் தன் இறுதி மூச்சுவரை இச்செயல் திட்டங்களை விடாது செயல்படுத்தி வந்தார்.
 
பார்ப்பனர்களின் சுரண்டலிலிருந்து தமிழ் மக்களைக் காப்பதற்காகவே 1937 ஆம் ஆண்டு பெரியார் தனித் தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தினார், மற்றபடி மொழி அல்லது இனத்தின் மீது கொண்டு பற்றினாலோ அல்லது பிற இனத்தினரின் மீது கொண்டு வெறுப்பினாலோ அல்ல. அவர் முன்வைத்த தனித்தமிழ்நாடு கோரிக்கை மிகவும் முற்போக்கானது.
 
அதில் முஸ்லிம்கள், கிறித்துவர்கள், பவுத்தர்கள், சமணர்கள் எல்லோருக்கும் சமத்துவமான இடம் இருந்தது. மேலும், ‘தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த பார்ப்பனர்களும் இங்கேயே வாழலாம். ஆனால், அவர்கள் இங்கு மனிதர்களாக வாழ முடியுமே தவிர, தேவர்களாக வாழமுடியாது’ என்பதையும் கூறினார்.
 
வர்ணாசிரம அடிப்படையில் நம்மைச் சுரண்டும் பார்ப்பனர்களிடமிருந்தும், பொருளாதார ரீதியாக நம்மைச் சுரண்டும் பனியாக்களிடமிருந்தும் தமிழ்ச் சமுதாயம் விடுபட ஒரே வழி இந்தியா என்ற கட்டமைப்பில் இருந்து விடுதலை பெற்று தமிழ்நாடு தனி நாடாவதே என்பதை தனது வாழ்நாளின் இறுதிவரை முழங்கி வந்தவர் பெரியார்.
 
ஆனால், முதல் மொழி, மூத்த இனம் என்ற வெற்றுப் பெருமிதங்களின் அடிப்படையில் தமிழ்த் தேசியத்தை சீமான் போன்ற சிலர் இன்று கட்டமைக்கிறார்கள். 'நான் பிறப்பால் உயர்ந்தவன்; எனது அக்ரகாரத்தில் மற்றவர்களுக்கு இடமில்லை' என்று பார்ப்பனர்கள் சொல்வதற்கும், 'நான் உலகின் மூத்த குடியைச் சர்ந்தவன்; எனது நாட்டில் மற்றவர்களுக்கு இடமில்லை' என்று இவர்கள் சொல்வதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இருவருமே, பிறப்பின் அடிப்படையில், தங்களைத் தவிர்த்த மற்றவர்கள் மீது வெறுப்பைக் கக்குகிறார்கள்.
 
சாதி ஒழிப்பு, இந்துமதம் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பை முன்னிறுத்தி 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழங்கிய பெரியாரிடம் இருந்து, 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கத்தை மட்டுமே உருவி எடுத்துக் கொண்டு நாம் தமிழர் கட்சியினர் தமிழ்த் தேசியம் பேசுகிறார்கள். இந்தியா என்ற சிறைக்கூடத்தில் இருந்து விடுதலை பெறுவதே தமிழ்த் தேசியம். ஆனால், அந்த சிறைக்கூடத்தின் வார்டன் பதவியை அடைந்தால் போதும் என்று செயல்படுபவர்கள் நாம் தமிழர் கட்சியினர்.
 
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்பாக தமிழக மக்கள் இடையே ஒரு கொந்தளிப்பு நிலவி வருகிறது. ஏற்கனவே காவிரி நதிநீர்ப் பிரச்சினை, தமிழக மீனவர்கள் படுகொலை, முல்லைப் பெரியாறு சிக்கல் ஆகியவற்றில் இந்திய அரசால் வஞ்சிக்கப்பட்டு வரும் நிலையில், ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டது தமிழக இளைஞர்களிடையே தமிழ்த் தேசிய உணர்ச்சியை மிக வேகமாக பற்ற வைத்திருக்கிறது. இந்த தமிழ்த் தேசிய உணர்வலையை ஓட்டுகளாக அறுவடை செய்யும் வேலையில்தான் சீமானின் நாம் தமிழர் கட்சி இறங்கியுள்ளது என்று கீற்று இணையத்தின் ஆசிரியர் நந்தன் பகிரங்க குற்றசாட்டை வைத்துள்ளார்.
 
கீற்று இணையத்தின் ஆசிரியர் தோழர் நந்தா அவர்களின் கருத்துக்களுக்கு சீமான் என்ன பதில் சொல்ல போகிறார் பொறுத்திருந்து பார்ப்போம்.
 
தமிழ் தேசிய சிந்தனைவாதிகள் தங்களுக்குள் சர்ச்சை செய்து கொள்வது ஆரோக்கியமே! ஆனால் அது சண்டையாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்ளட்டும், என்பதே எங்களது அன்பான வேண்டுகோள்.

5 comments:

Anonymous said...

சீமானை யாரும் குறை சொல்ல முடியாது. அவர் தமிழ் இன விடுதலையின் விடிவெள்ளி.

Sri Lanka Tamil News said...

சீமான் தனித்து குரல் கொடுக்க வேண்டும்
எந்த கட்சியுடனும் சேரகூடாது.

Unknown said...

Seeman ninaithal, tamileelam malarum vaaypu irukku, ltte puththuyir peravum vaaypu irukku

ruban said...

/////உலகின் மூத்த குடியைச் சர்ந்தவன்; எனது நாட்டில் மற்றவர்களுக்கு இடமில்லை.///// முதலில் இப்படி ஒரு பதிவு எங்கு இருக்கிறது என்று சொல்லுங்கள் முதலில்....இந்த புகை படத்தை பதிவு பண்ணினது இல் இருந்து தெரிகிறது... கீற்று நந்தன் அறிவு எப்படி என்று...

ruban said...

////பார்ப்பனர்களின் சுரண்டலிலிருந்து தமிழ் மக்களைக் காப்பதற்காகவே 1937 ஆம் ஆண்டு பெரியார் தனித் தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தினார்/////// அதே போல தான் திராவிட கொள்ளை கூட்டத்தில் தமிழ் நாட்டை இருந்து கபற்றவே இபொழுது சீமான் நாம் தமிழர் என்று சொல்லுகிறார்...