Nov 1, 2012

மறக்க முடியுமா நீரா ராடியாவை?


Nov 02: இந்தியாவை ஆளுவது டாடா, பிர்லா, ரிலையன்ஸ் போன்ற இந்திய கார்பரேட் முதலாளிகளும், நோக்கியா, போர்ட், பெப்சி போன்ற அந்நிய கார்பரேட்  முதலாளிகளுமே.
 
இன்றைய இந்தியாவின் சில்லரை வர்த்தகத்தின் சந்தை மதிப்பு சுமார் 28 லட்சம் கோடி ரூபாய். இது 2014ல் ரூ 50.4 லட்சம் கோடி அளவுக்கு வளர்ந்துவிடும்.

இதனாலேயே, உலகின் மிகபெரிய வர்த்தக சந்தையான இந்தியாவை, வால்மார்ட் போன்ற கார்பெரெட் நிறுவனங்கள் அபகரிக்க துடிக்கின்றன.
 
வால்மார்ட் வந்தால் நமதூரில் பலசரக்கு கடை, பெட்டிக்கடை, காய்கறிக்கடை, என்று வைத்திருக்கும் சுமார் 5 கோடி பேர் தங்களது வருமானத்தை, வாழ்வை இழக்க வேண்டி வரும். இவர்கள் அரசைச்சாராமல் சுயதொழில் செய்பவர்கள், இதனால் நேரடியாக பலகோடி பேர் வேலையில்லாமல் அவதிப்பட வேண்டியது வரும்.
 
ஆட்சியில் காங்கிரஸ் இருந்தாலும், பிஜேபி இருந்தாலும் முடிவுகளை எடுப்பது கார்ப்பரேட் நிறுவனங்களே, இவர்கள் பணத்துக்காக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு நாட்டை விற்பதாகவும். மேலும் பெட்ரோலிய அமைச்சராக யார் வருவது என்பதை ரிலையன்ஸ் நிறுவனம்தான் தீர்மானிக்கிறது என்றும் அன்னா ஹசாரே குழுவில் இடம் பெற்றிருந்த அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்
 
செயற்கையான காஸ் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, காஸ் விலையை உயர்த்தி உள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். அதற்கு, ஆட்சி, அதிகாரத்தில் இருந்தவர்கள் உதவி செய்துள்ளனர். அமைச்சர்களை, கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்கள்தான் தேர்ந்தெடுக்கின்றனர். தொலை தொடர்பு அமைச்சரை, டாடா நிறுவனமும், பெட்ரோலிய அமைச்சரை, ரிலையன்ஸ் நிறுவனமும் நியமிக்கின்றன, இதுதான் இந்த நாட்டின் லட்சணம்.
 
அரசியல் தரகர் நிராடியாவை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். இவருக்கும் பிரதமர் வாஜ்பாய் மருமகனுக்கும் இடையே நடந்த போன் உரையாடலில், தயாநிதிக்கு, தொலை தொடர்பு துறை அமைச்சர் பதவி கிடைத்தது எப்படி? அமைச்சர் பதவி குறித்து, தி.மு.க., மேலிடம், காங்கிரஸ் மேலிடத் தலைவர்களிடம், நேரடியாக பேசிய பேரம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர், முகேஷ் அம்பானியின் குல்மால், ஆகியவை அடங்கி இருந்தன. இந்தியாவை கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்கள்தான் ஆள்கின்றனர். காங்கிரசுக்கு ஓட்டு போட்டாலும், பாரதிய ஜனதாவுக்கு ஓட்டு போட்டாலும், முடிவெடுப்பது என்னவோ இவர்களே.

1 comment:

Easy (EZ) Editorial Calendar said...

நம் நாட்டின் நிலையை நினைத்தாலே மிக கவலையாக தான் இருக்கிறது....எப்போது எந்த நிலைமை மாறும் என்றே தெரியவில்லை....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)