Oct 3, 2012

"குடி" குடியை கெடுக்கும்! மதுவுக்கு தடைவருமா?

Oct 04: இந்தியா சுதந்திரம் பெற்று அறுபத்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது ஆனால்  மது விலக்கும், தீண்டாமையும் இன்னும் ஒழியவில்லை.

உடலுக்கு கேடு விளைவிக்கும் மது இன்றைய கொண்டாட்டங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகிறது. புத்தாண்டு, பண்டிகை, திருவிழாக்கள்  என்று மது விற்பனை களைகட்டுகிறது.

தமிழ் சமூகத்தில், தனி மனித வாழ்க்கையில் பெரும் ஒழுக்கக்கேடுகளாகக் கருதப்படுகின்றவற்றில் மது பழக்கமும் ஒன்று. மதுக்கடைகள் மூலம் தமிழ்நாட்டின் ஆண்டு வருமானம் 18 ஆயிரம் கோடி ரூபாய்.

அரசுக்கு மதுவின் மூலம் வரும் வருமானம்தான் பெரிதாக தெரிகிறது. ஆனால் மது வியாபாரத்தால் சீரழிந்த குடும்பங்கள் பல கோடி. இதை நம்பி தான் அரசின் இலவச திட்டங்கள் செயல்படுகின்றன. ஒருபக்கம் மக்களை அழித்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு இலவசங்களை அள்ளி வீசுகிறது நமது மதிகெட்ட அரசுகள். மது அருந்துபவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஆகும் மருத்துவ செலவோ ரூ. 2 லட்சம் கோடி.


குடி குடியைக் கெடுக்கும்” என்பது முதுமொழி.  குடிப்பதால் கல்லீரல் பாதிப்படைகிறது. உடல் மஞ்சள் ஆகுதல், பித்த நீர்க்குழாய் அடைப்பினால் வயிற்றுவலி, பசியின்மை உருவாகும்.  தோளிலும் காலிலும் தசை நார்கள் செயலிழக்கும். மூளை பாதிக்கப்பட்டு மறதி, சோர்வு ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவதுடன் மனநோயும் ஏற்படும். மூளை, இதயம், நரம்பு, இனவிருத்தி உறுப்பு, இரைப்பை, கணையம் ஆகியவை நாளடைவில் பழுதடையும். வாய், தொண்டை, உணவுக் குழாய்களில் புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கும்.

இப்படி மனிதனுக்கு கேடு விளைவிக்கும் இந்த மதுவை முற்றிலும் தடை செய்யவேண்டும் என்பதே மனித நேயம் உள்ள ஒவ்வொரு மனிதனின்  வேண்டுகோள்.

6 comments:

Seeni said...

aaamm...

திண்டுக்கல் தனபாலன் said...

பல குடும்பங்கள் நிம்மதி அடையும்...

Easy (EZ) Editorial Calendar said...

இதனால் பல குடும்பங்கள் மகிழ்ச்சி அடயும்....

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

PUTHIYATHENRAL said...

வாருங்கள் தோழர் சீனி அழகா கவிதை மாதிரி ஒரே வரியில் சொல்லிடீன்கள். உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

PUTHIYATHENRAL said...

வணக்கம் தோழர் பாலன் அவர்களே! சரியா சொன்னீங்கள் பல குடும்பம் நிம்மதி அடையும். நிச்சயமாக.

PUTHIYATHENRAL said...

,,,,Easy (EZ) Editorial Calendar said... இதனால் பல குடும்பங்கள் மகிழ்ச்சி அடயும்////


உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.