Oct 2, 2012

வட இந்திய காலனி ஆதிக்கத்தில் இருந்து நாம் விடுபடுவோம்!



தமிழகத்தில், விடுதலைப் புலிகள் இயக்கம் வலுவடைந்து வருகிறதா' என்ற கேள்விக்குப் பதிலளித்த ராணுவ அமைச்சர் அந்தோணி, ""மத்திய அரசு, உன்னிப்பாகக் கவனித்து வருகிறது,''  என்றார். 

என்ன ஒரு மேதாவித்தனமான  ராணுவ அமைச்சர், ஒன்று வலுவடைந்து வருகிறது என்று சொல் அல்லது வலுவடைய வில்லை என்று சொல். மத்திய அரசு உன்னிப்பாக கவனிக்கிறதாம், கவனித்து எதை சாதிக்க போறீங்கள்.  நீங்கள் கவனித்தாலும், கவனிக்காவிடிலும்  அதை பற்றி தமிழர்களுக்கு கவலையில்லை. 

தமிழர்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்தும் வேலையை இந்தியா செய்து வந்தது. அதில் முக்கியமானவைகளாக ஈழத்து இனப்படுகொலை, தமிழக மீனவர்கள் படுகொலை, கூடங்குளம் அணுஉலை, முல்லை பெரியார், காவரி நதிநீர் பிரச்சனை ஆகிவைகள் அடங்கும். இந்தியா என்கிற வடஇந்திய காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து தமிழர்கள் வெளியேற வேண்டும் என்றே விரும்புகிறார்கள். அந்த அளவுக்கு தமிழர்கள் இந்தியாவினால் புறக்கணிக்கப் படுகிறார்கள் என்பதே உண்மை. 
ஈழத்து இனப்பிரச்சனைக்கு எதிர்காலத்தில் தீர்வு காணும் பாரிய பொறுப்பை தமிழர்கள் என்கிற முறையில் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் எற்றுடுப்பார்கள்.  ஈழத்து இனப்படுகொலைக்கு தீர்வாக ராஜபக்சே கூட்டம் தண்டிக்கப்பட வேண்டும். அதே நேரம் தனித்தமிழீழம் மலர இந்தியா உதவேண்டும். இல்லையேல் மீண்டும் ஆயுத போராட்டம் தொடங்கும் அது ஈழத்தில் இல்லை தமிழகத்தில் என்பதை இந்த வட இந்திய வடவர்களுக்கு சொல்லிவைக்கிறோம். 
ரௌத்திரம் பழகு
...யாழினி...

No comments: