Oct 29, 2012

சென்னை குலுங்கியது! அதிர்ந்தார் அம்மையார்!


Oct 30: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்கள் சுமார் 25 வருட காலமாக நடைபெற்று வருகிறது.

அண்மைக்காலமாக தீவிரமடைந்துவரும் போராட்டத்தை மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தி தீர்ப்பதற்கு பதிலாக, காவல்துறையின் ஒடுக்குமுறை மூலம் அடக்க முயற்ச்சித்தது தமிழக மற்றும் மத்திய அரசு.

இந்நிலையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண்பதில் அரசு தோல்வி அடைந்துள்ளது. மக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி கவலையில்லாமலும், அப்பகுதி மக்களின் அச்சத்தை போக்காமலும் அவசர அவசரமாக அணு உலையை இயக்கதுடிப்பது ஆபத்தானது, கண்டிக்கத்தக்கது.

இந்நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று அணு உலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கூடங்குளம் அணு உலைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில்  (29.10.2012) அன்று சட்ட மன்ற முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.

சட்ட மன்ற முற்றுகை போராட்டம் என்றதும் எங்கே தனது ஆட்சிக்கு பங்கம் வந்து விடுமோ என்று ஜெயலலிதா அம்மையாருக்கு பயம் வந்து விட்டது. மக்களை அமைதி வழியில் தங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்க விடாமல், தனது அராஜ காவல்துறையை குவித்து மக்கள் போராட்டத்தை அடக்க நினைத்தார். இதனை தடுக்க சென்னை கடற்கரை சாலை முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இதையும் மீறி மக்கள் அலைகடல் என திரண்டார்கள்.
 
இந்நிலையில் தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாகச் சென்ற கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள்  மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல் முருகன், SDPI கட்சி, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், பாபுலர் பிரான்ட் ஒப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு அமைபினரும் இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை நகரமே மக்கள் வெள்ளத்தால் குலுங்கியது  போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அரசு இயந்திரத்தின் எவலாளிகள் (காவல்துறை) கைது செய்தனர்.

5 comments:

Seeni said...

nalla pakirvu

மர்மயோகி said...

ஒரு மண்ணாங்கட்டியும் நடக்கல...யாரு கூடன்குள அணு மின் நிலையத்தை எதிர்த்தா? விடுதலைப்புலி கோஷ்டியை சேர்ந்த தேச துரோகி வைக்கோலும், இன்னொரு அமெரிக்காவின் கொத்தடிமை தேசதுரோகி உதயகுமாரும் சேர்ந்தா அது பெரிய கூட்டமா?

PUTHIYATHENRAL said...

மர்மயோகி உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி! தேசபக்தி முகமூடியை முதலில் அகற்றுங்கள். மக்கள் பிரச்சனைகள் என்னவென்பதை புரிந்து கொள்ள தலைப்படுங்கள். உங்கள் தேசபக்தி முகமூடி போபாலிலும், சத்திஸ்கரிலும், காஷ்மீர்ரிலும் கிழிந்து தொங்குகிறது. மனித உரிமை ஆர்வலர்கள் எல்லோரும் ஒரே கருத்தில் இருக்க தாங்கள் மட்டும் அரசு பயங்கரவாதத்தின் கொடுக்காக கொட்டுகிரீர்களே ஏன்! மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களுக்கு எதிராக பேசுகிறீரே!

ஒருசிலர் மீது நீங்கள் கொண்ட காழ்புணர்ச்சி நீங்கள் நீதி செலுத்துவதற்கு தடையாக இருக்க வேண்டாம். என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

Anonymous said...

ela marmayogiya illa mairu yogia kuur ketta guti vunekku kundila gasa thirakkanum

iaahige said...

சென்னை குலுங்கியது! அதிர்ந்தார் அம்மையார்! after no news,
afraid for ammam, no news about கூடங்குளம்