Oct 28, 2012

அருவருப்பூட்டும் இந்திய அரசியல்வாதிகள்!


Oct 29: இந்திய அரசியல்வாதிகளிடம் நன்னெறிகள் குறைந்து வருவது அருவருப்பூட்டுகிறது என்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா சாட்டையடி கொடுத்துள்ளார்.

பாரதிய ஜனதா மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி ஆகியோரின் நெருங்கிய உறவினர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதற்கு ஆதாரம் இருந்தும், காங்கிரஸ் அதனைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

குற்றத்தைப் பார்த்துக் கொண்டு மௌனமாக இருப்பதும் குற்றம்தான். உயர்நிலை அளவில் ஊழல்களை சகித்துக் கொள்வதையே இது காட்டுகிறது. மற்ற கட்சியினர் பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் இழப்பை வெளிப்படுத்தாததன் மூலம் அரசியல் கட்சிகள் தங்களின் கடமையிலிருந்து தவறுகின்றன. இந்திய அரசியல்வாதிகளிடம் நன்னெறிகள் குறைந்து வருவது அருவருப்பூட்டுகிறது. ஆதாரம் இருந்தும் அதனை வெளிப்படுத்தாதது அரசியல் இழிவான நிலைக்கு இறங்கியிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
 
சிந்திக்கவும்: எம்ஜிஆர், கருணாநிதி இவர்கள் ஆட்சியில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து கொள்வார்கள் ஆனால் கருணாநிதி செய்த ஊழல்கள் பற்றி எம்ஜியார் சரியான நடவடிக்கைகளை எடுக்காததன் விளைவே இன்று கருணாநிதி குடும்பம் மக்கள் சொத்தை கொள்ளையடித்து பெரும் கோடிஸ்வரர்களாக திகழ்கிறார்கள்.

அதுபோல்தான் பாரதிய ஜனதா ஆட்சி காலத்தில் காங்கிரஸ் கட்சியினர் செய்த பிரங்கி பேர ஊழல் முதல் பல ஊழல்களை கண்டு கொள்ளவில்லை. அதற்க்கு பகரமாக பாரதிய ஜனதா கட்சி செய்த கார்கில் போரில் இறந்த வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கிய ஊழல் முதல் பல ஊழல்களை காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை. இதுதான் இந்திய சாக்கடை அரசியல். தேர்தல் நேரங்களை மக்களை ஏமாற்றி ஓட்டுகளை பிட்ச்சை எடுக்கும் பொழுதுதான் இவர்கள் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசிக்கொள்வார்கள்.

1 comment:

Easy (EZ) Editorial Calendar said...

நம் நாட்டின் அரசியல் ஒரு சாக்கடை என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)