Oct 26: மதுரை மத்திய தொகுதி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சுந்தர்ராஜன், திட்டக்குடி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் க.தமிழழகன் இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று முதல்வரைச் சந்தித்தனர்.
முதல்வருக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்த அவர்கள், தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுவதாகக் கூறி பாராட்டினர். மேலும், தங்கள் தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்கு தமிழக அரசின் உதவியையும் ஆதரவையும் கோரினர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், அரசுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்து அரசையும் ஆட்சியையும் விமர்சித்து பல இடங்களில் பேசி வருகிறார். இந்நிலையில், அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் இருவர் முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசியிருப்பது அவர்கள் இருவரும் அதிமுகவில் இணைவார்கள் என்று நம்பப்படுகிறது.
சிந்திக்கவும்: ஆட்சியில் இருப்பவர்கள் சூழ்ச்சி செய்து பெரும் கட்சிகளையே உடைத்து விடுகிறார்கள். இந்நிலையில் அரசியல் அரிசுவடி நடிகர் விஜயகாந்த் நிலைமை புயலில் சிக்கிய படகு போலத்தான்.
இவர் பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க போகிறேன் என்று ஒரு மாயை கதைகளை சொல்லி, புள்ளிவிபரங்கள் பேசி மக்களை ஏமாற்றி கட்சி தொடங்கினார். கடைசியில் வெத்து வேட்டு விஜயகாந்து என்று கிடைத்த எதிர்கட்சி தலைவர் பதவியை பயன்படுத்த தெரியாமல் இப்பொழுது தவிக்கிறார்.
1 comment:
unmai...
Post a Comment