Oct 16, 2012

இந்திய ஒருமைப்பாட்டை கட்டிக்காக்கும் தமிழர்கள்!

Oct 17: பரம்பிக்குளம், ஆழியாறு பாசனத்திட்ட ஒப்பந்தப்படி ஆழியாறு  மணக்கடவு தடுப்பணை மூலம் ஆண்டுக்கு 7.25 டி.எம்.சி. தண்ணீரும், சோலையாறு அணையில் இருந்து ஆண்டுக்கு 12.3 டி.எம்.சி. தண்ணீரும் நாம் கேரளாவிற்கு வழங்கி வருகிறோம்.

இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை பொய்த்து விட்டதால் தமிழகப் பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. எனினும் கேரளத்துக்கு வரும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் 1.25 டி.எம்.சி. தண்ணீரை வழங்க தமிழகம் ஒப்புக் கொண்டுள்ளது. நமக்கு தேவையான தண்ணீர் இல்லாத போதும் நாம் கேரளாவிற்கு தண்ணீர் வழங்கி வருகிறோம்.

சிந்திக்கவும்: இந்தியாவின் ஒற்றுமைக்கு உறுதுணையாக இருப்பதே தமிழர்கள்தான். தமிழர்கள்தான் மதம், இனம், மொழிகளை கடந்து அண்டை மாநிலத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்வதில் முதலிடம் வகிக்கின்றனர்.  கேரளா, முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் நம்மோடு மோதலை கடைபிடித்து வருகிறது. இருந்தாலும் நாம் அவர்களுக்கு தண்ணீர் கொடுக்கிறோம்.

கர்நாடகா, காவேரி நதி நீரை பகிர்ந்து தர மறுக்கிறது, இருந்த போதிலும் நாம் அவர்களுக்கு மின்சாரம் கொடுப்பதை நிறுத்தவில்லை. இப்படி ஒருமைபாடிற்கு உறுதுணையாக மனிதாபிமானத்தோடு நடக்கும் தமிழர்களை தொடர்ந்து வஞ்சிப்பதையே தனது தலையாய கடமையாக எண்ணி செயல்பட்டு வருகிறது மத்திய வடகிந்திய வடவர்கள் அரசு. ஈழத்தமிழர்கள் படுகொலைகள் முதல்  தமிழக மீனவர்கள் விடயம் வரை மத்திய அரசின் துரோகம் தொடர்கதையாகி விட்டது.

2 comments:

Anonymous said...

Tamil people is very nice people.

Tamil seiythigal said...

இப்படி இருந்து இருந்து தான் ஏமாந்து போகிறோம்.