
இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக விமானிகள் மற்றும் ஊழியர்களுக்கு சரிவர சம்பளம் கொடுக்காததால் பெரும்பான்மையான விமானிகள் பணிக்கு வரவில்லை. இதனால் இந்த மாதம் 1 ம் தேதி முதல் கிங் ஃபிஷர் நிறுவனம் விமானங்களை இயக்கவில்லை.
இந்நிலையில் விமானங்களை இயக்காதது குறித்து விமான போக்குவரத்து ஆணையம் விளக்கம் கோரியிருந்தது. இதற்கு கிங் ஃபிஷர் நிறுவனத்தின் விளக்கம் திருப்தி அளிக்காததால் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களில் விஜய் மல்லையா கொடுத்த கிட்டத்தட்ட இருபது லட்சம் டாலருக்கான காசோலைகள் அவரது வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாத காரணத்தால் திருப்பி வந்த விவகாரம் தொடர்பில் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம் தொடுத்துள்ள வழக்கின் பேரில் விஜய் மல்லையாவுக்கு தென்னிந்திய நீதிமன்றம் ஒன்று பிடிவாரண்டு பிறபித்து இருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
3 comments:
கேட்பதற்கு ஆளில்லை... எல்லாமே பணம்... பணம்... பணம்...
புதுடில்லி: பிரச்னையில் சிக்கித்தவிக்கும் கிங்பிஷர் விமான நிறுவன முதலாளி மல்லையா மற்றும் அவரது மகன் வெளிநாடுகளில் ஜாலி டூர் சுற்றி வருகின்றனர். சம்பள பிரச்னையால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விமான சேவை உரிமத்தையும் மத்திய அரசு ரத்து செய்து விட்டது. இது குறித்து ஊழியர்கள் நிர்வாகத்தினருடன் இன்று பேச்சு நடத்தவுள்ளனர். ஆனால் நிறுவன மானேஜர்கள் விஜயமல்லையா மற்றும் இவரது மகன் ஆகியோர் வெளிநாடுகளுக்கு சுற்றுபயபணம் மேற்கொண்டுள்ளனர்
அரசியல் வாதிகள்,முதலாளிகள் ,அதிகாரிகள் கூட்டணி இப்படித்தான் மக்கள் பணத்தைக் கொள்ளைஅடிக்கும்.
Post a Comment