Oct 13, 2012

காவிரி நதிநீர் பிரச்சனை ஒரு அரசியல் ஒப்பாரி!

Oct 13: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதை கர்நாடக அரசு நிறுத்தியது. கர்நாடகாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி தர கோர்ட் அவமதிப்பு வழக்கை தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் கர்நாடகா அரசை, டிஸ்மிஸ் செய்ய வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் ஒரு மாநிலம், மற்றொரு மாநிலத்துக்கு, இழைக்கும் துரோகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கூறினார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 19 பிஜேபி எம்.பி.,க்கள், நேற்று முன்தினம், பிரதமர் மன்மோகன் சிங்கை, டில்லியில் சந்தித்துப் பேசினர். "தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும்படி, பிறப்பித்த உத்தரவை, வாபஸ் பெற வேண்டும்' என, வலியுறுத்தினர். இந்தக் கோரிக்கையை, பிரதமர் ஏற்கவில்லை.

பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுகளை, காற்றில் பறக்க விடுவது போல, கர்நாடகம் நடந்து கொண்டது, தமிழக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காத, கர்நாடகா மீது, கோர்ட் அவமதிப்பு வழக்கை தொடர, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சிந்திக்கவும்: பாரதிய ஜனதா, காங்கிரஸ், போலி கம்னிஸ்ட் போன்ற தேசிய கட்சிகளையும், ஊழல், மற்றும் குடும்ப அரசியல் நடத்தும் தமிழக கட்சிகளையும் நம்பாமல் தமிழர்கள் ஓரணியில் திரளவேண்டும். இதில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஓட்டுகளை பொருக்க வீணே ஒப்பாரி வைக்கிறார்களே தவிர பிரச்சனை தீரவேண்டும் என்பதல்ல அவர்களது நோக்கம். இந்த அடாவடி செயலுக்கு ஒரு முடிவு கட்ட தொடர் போராட்டங்களை நடத்த வேண்டும்.

*மலர் விழி*

2 comments:

Anonymous said...

Sariya sonneenga

Easy (EZ) Editorial Calendar said...

பிரதமரிடம் சொல்லி ஒன்றும் ஆகா போகிறது கிடையாது..அவரை ஆட்டுவிப்பவங்களிடம் சொன்னா ஒருவேளை நடக்கலாம்....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)