Oct 03: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகில் உள்ள தோப்புவளசை கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் ரியல் எஸ்ட்டேட் அரக்கர்களால் எரித்து கொல்லப்பட்டுள்ளனர்.
தோப்புவலசை கிராமத்தை சேர்ந்த காளிமுத்து என்பவருக்கு 1 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த ரியல் எஸ்ட்டேட் பண்ணுபவர்கள் இவரது இடத்தை சுற்றி உள்ள இடத்தை வாங்கிவிட்டு இவரது இடத்தையையும் கேட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுத்ததால் ரவுடிகளை கொண்டு மிரட்டி உள்ளனர்.
இந்நிலையில் 30.09.2012 அன்று இரவு காளிமுத்துவும் அவரது குடும்பத்தினரும் உறங்கி கொண்டு இருக்கும்போது குடிசையின் வெளியே தாழ்பாள் போட்டு விட்டு குடிசையை தீயிட்டு கொளுத்தி உள்ளனர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த காளிமுத்து (30 ), காளீஸ்வரி (12), மகன் பாலா (7), மகள் சரண்யா (5), சக்தி (2), கருப்பையா (65 ), ஆகியோர் பலியாயினர்.
ஒரு ஏக்கர் நிலத்தின் விலை ஆறு உயிர்கள், எத்தனை கொடூரம் இது மனித
நேயம் செத்துவிட்டதா நம் மண்ணில். கிராமங்கள் என்றாலே மண்வாசனையோடு மரம் செடி விவசாயம் என்று பசுமை குலுங்கும். நகரத்து மக்களோடு ஒப்பிடும் போது கிராமத்து மக்களிடம் மனிதாபிமானமும், வாக்கு நாணயமும், நேர்மையும் கொட்டி கிடக்கும்.
அப்படிப்பட்ட அழகிய கிராமங்களில் ரியல் எஸ்டேட்களை உருவாக்கி விவசாயத்தையும், பசுமையையும் அழித்தனர். குளங்களை மூடி நீர்வலத்திர்க்கு முற்றுபுள்ளி வைத்தனர். அங்குவாழும் ஆயிரக்கணக்கான ஏழை மக்களை ஏமாற்றி நிலங்களை அபகரிப்பதும், ரவன்யூ துறையை சேர்ந்தவர்களுக்கு இலஞ்சப்பணத்தை விட்டெறிந்து போலி பத்திரங்களை தயாரித்து அதை காட்டி ரவுடிகள் மூலம் ஏழை மக்களை ஏமாற்றி நிலங்களை அபகரித்தும் வந்தனர்.
இந்த கொளுத்த பணக்கார ரியல் எஸ்ட்டேட் அரக்கர்களில் பெரும்பான்மையினர் எம்.எல்.ஏ., மந்திரி போன்ற அரசியல் கட்சிகளின் பினாமிகளே. ஜெ, சசிகலா, கருணாநிதி, மற்றும் அமைச்சர்களின், பணக்காரர்களின் பினாமிகள் அமெரிக்கா முதல் துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வசித்து வருகின்றனர். இந்த அரசியல் பெருந்தலைகளின் பணங்கள் வெளிநாடுகளில்தான் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இது போக மீதம் உள்ளவர்கள் செய்யும் அட்டூழியம்தான் இவைகளெல்லாம்.
ரியல் எஸ்ட்டேட் என்கிற சாத்தான்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும். ரியல் எஸ்ட்டேட் என்கிற தொழிலே முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டியது. இதனால் மக்களுக்கு எந்த லாபமும் இல்லை, இதனால் மிஞ்சுவது அனைத்தும் கேடுதான். இதை கொண்டு பணம் சம்பாதிப்பது எல்லாம் கொளுத்த பணம் படைத்த முதலாளிகளே. இந்த ரியல் எஸ்ட்டேட் தொழில் மூலம் இயற்க்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன. ரியல் எஸ்டேட் தொழிலை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.

8 comments:
மிக துயரமான சம்பவம், சமந்தப்பட்ட குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
இந்த உலகத்தில் நீதி செத்து மிக நீண்டகாலம் ஆகிப்போச்சு :(
kodumai....
கொடுமையோ கொடுமை! காவல் நாய்கள் எல்லாம் பணக்கார்களை கண்டால் மட்டுமே வாலாட்டும். ஏழைகளை கண்டால் கடித்து குதறும்.
இந்த கொடூர சம்பவ வழக்கு தொடர்பாக இன்று ராமநாதபுரத்தில் முனியாண்டி, மங்களநாதன், லூயிஸ்ராஞ், பஞ்சாட்சரம், சுஜாகனி, காளிமுத்தன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆயிஷா பாரூக் உங்கள் வருகைக்கும் நல்ல கருத்துக்களுக்கும் நன்றி.
வணக்கம் தோழி அம்பாள் அடியாள், கிராமங்களில்தான் மனிதாபிமானமும் நீதியும் இருந்தது அதையும் இவர்கள் கெடுத்து நாசம் செய்கிறார்கள்.
வாருங்கள் தோழர் சீனி அழகா கவிதை மாதிரி ஒரே வரியில் சொல்லிடீன்கள். உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
Post a Comment