Sep 6, 2012

பட்டாசு வெடிப்பது வீணர்களின் விளையாட்டு!


Sep07: விருதுநகர் மாவட்டம், முதலிப்பட்டியில் உள்ள,பட்டாசு தொழிற்சாலையில் ஏற்ப்பட்ட வெடிவிபத்தில் இருபெண்கள் உட்பட, 38 பேர்  பலியாயினர், 44பேர் படுகாயமடைந்தனர். 

மனிதர்களுக்கும் இயற்கைக்கும் ஆபத்தை உண்டாக்கும் இப்படிப்பட்ட ஒரு சடங்கு, கேளிக்கை தேவையா? இந்தியாவில் 10-ல் ஒருவருக்கு காது கேளாமை கோளாறு இருக்கிறது, இதற்கு முக்கிய காரணங்களில் பட்டாசு வெடிப்பதும் ஒன்று. 

பட்டாசு வெடிக்கும் பொழுது அதில் இருந்து வெளியாகும் புகையால் கண், மூக்கு, தொண்டை, போன்றவற்றில் பல்வேறு கோளாறுகள்  ஏற்ப்படுகின்றது. மேலும் பட்டாசில் கலந்துள்ள பாஸ்பரஸ், சல்பர், பொட்டாசியம், நைட்ரேட், கார்பன் மோனாக்சைடு போன்ற ரசாயன பொருட்களால் நுரையீரல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும், ஆஸ்மாவும் உண்டாகும்.
இதுமட்டும் இல்லாமல் இதை தாயாரிக்கும் பொழுதும், விற்பனைக்காக வைத்திருக்கும் இடங்களிலும், பண்டிகைகாலங்களில் வெடிக்கும் பொழுதும் எண்ணிலடங்கா விபத்துக்கள் ஏற்ப்பட்டு ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கில் உயிர்கள் பலியாகின்றன. இப்படிப்பட்ட ஒரு ஆபத்தான ஒரு பொருளை சடங்கு, கேளிக்கை என்கிற விதத்தில் பயன்படுத்த அரசு எப்படி அனுமதி அளிக்கிறது?

சுற்றுப்புற சூழல் மற்றும் மனிதர்களுக்கு கேடு உண்டாக்கும் அபாயகரமான பட்டாசை தாயரிப்பதையும், வெடிப்பதையும் அரசு தடை செய்யவேண்டும். ஒரு நொடியில் மக்களின் பொருளாதாரம் எந்த பிரோயோஜனமும் இல்லாமல் வெடித்து காற்றில் கரைந்து போகிறது. இதனால் யாருக்கு நான்மை, இந்த பணத்தை ஏழை எளிய மக்களுக்கு பசிதீர்க்க உதவலாமே. மனிதர்களுக்கும், இயற்கைக்கும் எந்தவிதத்திலும் பயன்தராத, அதேநேரம் கேடு உண்டாக்கும் பட்டாசுக்கு அரசு நிரந்தர தடைகொண்டுவருமா?
நட்புடன் ஆசிரியர்: புதியதென்றல்.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொரு வருடமும் இது போல் தொடர்கின்றன... இந்த வருடம் தீபாவளியை யாரும் கொண்டாட கூடாது...

பெருமாள் தேவன் செய்திகள் said...

நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் ஏற்கனவே இது மக்களுக்கு பழக்கமாகி விட்டதால் இதனை சிறிது சிறிதாகத்தான் குறைக்க வேண்டும். முதலில் அதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களிடம் ஏற்பட வேண்டும்.

நிலாமகள் said...

விப‌த்தில் ப‌லியாவோர் ஏழை எளிய‌ ம‌க்க‌ள் என்ப‌தால் ந‌ட‌வ‌டிக்கை எடுத்து த‌டுத்து நிறுத்த‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் க‌வ‌ன‌ம் ச‌ற்றும் இதில் இருப்ப‌தில்லை. அனுதாப‌மும் அப்போதைக்க‌ப்போதைய‌ நிவார‌ண‌ நிதியும் ச‌ந்த‌ர்ப்ப‌ சூழ‌லிலிருந்து த‌ப்பிக்க‌.

ப‌ண்டிகைக‌ளில் ப‌ட்டாசு வெடிக்கும் அப‌த்த‌த்திலிருந்து முன்னேறி இன்று திருவிழா ம‌ற்றும் திரும‌ண‌ வ‌ர‌வேற்பு, சாவு ஊர்வ‌ல‌ம், அர‌சிய‌ல் விழாக்க‌ள், தேர்த‌ல் வெற்றி என‌ ஆண்டுமுழுக்க‌ அத்தியாவ‌சிய‌ பொருட்க‌ளில் ஒன்றாக‌ மாறிவிட்ட‌தால் செய்ய‌வும் விற்க‌வும் தேவையிருக்க‌, காசைக் க‌ரியாக்க‌வும் யாரும் ச‌ளைப்ப‌தில்லை. க‌டுமையான‌ ச‌ட்ட‌ங்க‌ள் இதுபோன்ற‌வ‌ற்றை க‌ட்டுப்ப‌டுத்த‌ அவ‌சிய‌ம்.

PUTHIYATHENRAL said...

//ஒவ்வொரு வருடமும் இபோல் தொடர்கின்றனது .. இந்த வருடம் தீபாவளியை யாரும் கொண்டாட கூடாது..//

வணக்கம் திண்டுக்கல் பாலன் அவர்களே! உங்கள் வரவுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. நீங்கள் குறிப்பிட்ட இந்த கருத்தில் இருந்து நீங்கள் சொல்ல வருவது என்ன? சொல்வதை தெளிவாக விளக்கமாக சொல்லுங்கள். பொடி வைக்க தேவையில்லை.. இங்கே கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு...

ஏதோ பட்டாசை தீபாவளிக்கு மட்டும்தான் வெடிப்பது போலவும் அதனால் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று சொல்வதன் மூலம் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என்று சொல்ல வருவதாகவும் இந்த பதிவின் காருத்தை மாற்றும் வகையில் உங்கள் கருத்து அமைந்துள்ளது.

முஸ்லிம்கள் தர்கா கந்தூரிகளின் போதும், ரம்ஜான் பண்டிகைகளின் போதும், கிருஸ்தவர்கள் கிறிஸ்மஸ் பண்டிகைகள், புதியவருட கொண்டாட்டங்கள், அதைமீறி திருமண மற்றும் சவ ஊர்வலவங்களில், அரசியல் கட்சி வெற்றி விழாக்கள் இப்படி பல விசயங்களுக்கும் பட்டாசு வெடிக்கப்படுகிறது.

ஒரு நொடியில் பணம் எல்லாம் புகையாக போகிறது இதனால் எந்த பிரோஜனமும் இல்லை என்கிற பொது பார்வையிலேயே இந்த பதிவு எழுதப்பட்டுள்ளது. மற்றப்படி தீபாவளி கொண்டாட கூடாது என்று பதிவு சொல்லவில்லை.

நீங்கள் பதிவில் இருந்து ஒரு வரியை மட்டும் எடுத்துப்போட்டு அதாவது //ஒவ்வொரு வருடமும் இபோல் தொடர்கின்றனது// இந்த வருடம் தீபாவளியை யாரும் கொண்டாட கூடாது என்று நீங்கலாக பொருள் கொண்டு குறிப்பிடுவது முற்றிலும் தவறான ஒரு விடயமாகும். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

PUTHIYATHENRAL said...

வணக்கம் தேவன் அவர்களே நீங்கள் சொல்வது போல் மக்களிடம் இதை பற்றி விழிப்புணர்வுகளை கொண்டு சென்று ஒழிப்பது என்பது உடனே முடியாத ஒன்றுதான். அரசு கடுமையான சட்டங்கள் மூலம் இதை கொஞ்சமாவது தடுக்க முடியும்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தோழரே.

PUTHIYATHENRAL said...

வணக்கம் நீலா மகள்... நல்ல ஒரு கருத்தை பதிந்து இருக்கீங்கள். பாதிக்கப்பட்டவர்கள் ஏழைஎளிய மக்களாக இருப்பதால் நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற அக்கறை இருப்பதில்லை சரியான வரிகள்தான்.

ஏழை எளிய மக்களுக்கு தங்களது அன்றாடம் பசியை போக்கி கொள்ள வேலை வாய்ப்புகள் வேண்டும் அதனால் எந்த வேலையாக இருந்தாலும் செய்ய துணிகிறார்கள். எந்த வித பாதுகாப்புகளும் இல்லாத ஒரு சூழலில் தங்கள் உயிரை பணயம் வைத்து பட்டாசு தயாரித்து தங்கள் வாயிற்று பசியை போக்கி கொள்கிறார்கள்.

இந்த பட்டாசை நுகரும் மேல்தட்டு வர்க்கமோ அதன் வலிகளை உணர்ந்து கொள்ளாது பொருளாதாரம் என்கிற மக்களின் வாழ்வாதாரத்தை நொடியில் புகையாக்கி மகிழ்ச்சி அடைகின்றனர்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.