Sep 30, 2012

சகாப்தம் படைக்கிறார் முதல்வர் மம்தா!


Sep 30: திரிணாமுல் காங். தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா. சில்லவரை வர்த்தகத்தில் 51 சதவீத நேரடி அன்னிய முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவினை விலக்கி தான் போலி அல்ல என்பதை நிருபித்தார்.

மேலும் மேற்குவங்கத்தில் தனது ஆட்சில் அந்நிய முதலீட்டை நுழைய விடாமல் தடுக்க சிறப்பு சட்டம் இயற்றி, பேச்சளவில் எதிர்க்காமல் அதற்க்கு செயல்வடிவமும் கொடுத்தார் மம்தா. மற்றைய மாநில முதல்வர்கள் மவுனம் காக்கும்போது, அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக  விளங்கினார்.

BJP மவுன சாமியார் ஆனது, போலி கம்புனிஸ்ட்களும், கருணாநிதி மற்றும் கட்சிகளும், காங்கரஸின் காலை கட்டியாக பிடித்து கொண்டன. ஆனால் மம்தாவோ தனது மாநிலத்தில் அந்நிய முதலீட்டை முற்றிலும் தடுத்ததோடு அதை எதிர்த்து இந்திய அளவில் விழ்ப்புணர்வை ஏற்ப்படுத்த டில்லி ஜந்தர்மந்தரில் அக்.1-ம் தேதி பெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்துகிறார்.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்பது அபாயகரமானது. இதனால், நமது ஊர்களில் வீதி தோறும் பெட்டிக்கடை வைத்து பிழைக்கும், பல்லாயிரக் கணக்கான மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும்?! இந்தியாவில் வால்மார்ட் போன்ற நிறுவனங்களை கொண்டு வந்தே தீருவேன் என்று அந்நிய அடிமை மன்மோகன் சிங் திட்டங்களை வடிவமைக்கிறார். இவர் படித்த படிப்பும், மேதாவித்தனங்களும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதரங்களை அழித்து பணக்காரர்களின் கைகளில் இந்தியாவை கொண்டு ஒப்படைக்கும் என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை.

ஒரு வால்மார்ட் வந்தால் அது 1300 சில்லரை கடைகளை மூடவைக்கும்!
 
நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்.

2 comments:

Anonymous said...

Jayavum leady thane ivarkku eppo veeram varum

Seeni said...

nalla thakaval...