Sep 26, 2012

கூடங்குளம் போராட்டத்தை நசுக்க தொடரும் மின்வெட்டு!

Sep 27: கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக இடிந்தகரையில் மக்கள் மணலுக்குள் தங்களை புதைத்து கொண்டு புதுவிதமான போராட்டத்தை நடத்தினர்.

இடிந்தகரையில் சர்ச் வளாகத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். பின்னர் இடிந்தகரை கடற்கரைக்கு சென்று தானும்  மணலுக்குள் உடலை புதைத்தபடி, மக்கள் போராட்டத்தில் பங்கேற்றார். அதில் உதயகுமா
ர், புஷ்பராயன் உள்ளிட்ட தலைவர்களும் மண்ணில் புதைந்து தாங்கள் மக்கள் தலைவர்கள் என்பதை நிருபித்தனர்.

இந்நிலையில் தென் மாவட்டமான நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களின் கடற்கரையோர பகுதிகள் தொடர் மின்வெட்டு க்கு ஆளாகி வருகின்றது. தென்மாட்டங்களின் கடலோர கிராமங்களான தூத்துக்குடி பீச்ரோடு, மாதாகோவில், திரேஸ்புறம், பழையகாயல், புன்னகையால், காயல்பட்டினம், திருச்செந்தூர் அமலிநகர், ஆலந்தலை, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, பெரியதாழை, உவரி, கூடுதலை, கூட்டபனை, இடிந்தகரை, போன்ற கிராமங்களின் மீனவர்கள் மீன் பிடித் தொழிலையே ஜீவாதாரமாக கொண்டுள்ளனர்.


இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள்,  நாட்டுப்பட்குகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மீனவர்கள் பிடித்துவரும் மீன்களை பதப்படுத்தி சந்தைகளுக்கு கொண்டு சொல்லவும், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யவும் ஜஸ்கட்டிகள் தேவைப்படுகின்றது.  இதற்காக அப்பகுதிகளில் ஜஸ்கம்பெனி பிளாண்டகள் செயல்பட்டு வருகின்றன. தற்போதைய அறிவிக்கப்படாத மின் வெட்டு காரனமாக ஜஸ் பிளாண்ட்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் இந்த தொழிலையே நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அரசுக்கு தினமும் 70 லட்சம் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது அதோடு கடலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான மீனவகுடும்பங்களின் அன்றாட வருமானம் பாதிக்கப்பட்ட தோடு மீன் சந்தையில் பணப்புழக்கம் கடுமையாகச் சரிந்து உள்ளது. கூடங்குளம் போராட்டத்தை வலுவிழக்க செய்ய தென்மாட்டங்களில் தொடர் மின்வெட்டு திட்டமிட்டு நடத்தப்படுகிறது. இதற்க்கு முன்னாள் தடையின்றி கிடைத்த மின்சாரங்கள் இப்பொழுது எங்கே போனது. தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழ் நாட்டுக்கு போதுமானது. அதை அண்டை மாநிலங்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வாரியிறைத்து விட்டு மக்கள் போராட்டத்தை நசுக்க பல்வேறு கேவலமான உக்திகளை கையாண்டு வருகின்றன மத்திய, மாநில அரசுகள்.

10 comments:

மர்மயோகி said...

வைக்கோ தமிழ்நாட்டுக்கோ இந்தியாவுக்கோ நன்மை செய்ய என்னைக்காவது நினைத்து இருக்கானா? அவனுடைய நினைப்பெல்லாம் விடுதலைப்புலிகளிடம் இருந்து எப்போது பிச்சை பணம் வரும், எவன் தீக்குளிப்பான் போய் நிதி வழங்கி பேப்பரில் போஸ் கொடுக்க வேண்டும் எனபது தான்..இப்போ தமிழ் மக்களுக்கும், இந்தியாவுக்கும் எதிராக மின்சாரமே கிடைக்கக்கூடாதுன்னு சதி செய்கிற தேச துரோகிகள் உதயகுமாருடன் இந்த விடுதலைப்புலிகள் கோஷ்டியும் சேர்ந்து நல்லா கல்லா கட்டுறானுங்க...இவனுங்களுக்கு ஊடக ஆதரவு வேற....உருப்பட்டுடும்..

Easy (EZ) Editorial Calendar said...

\\"தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழ் நாட்டுக்கு போதுமானது. அதை அண்டை மாநிலங்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வாரியிறைத்து விட்டு மக்கள் போராட்டத்தை நசுக்க பல்வேறு கேவலமான உக்திகளை கையாண்டு வருகின்றன மத்திய, மாநில அரசுகள்."//

அரசுக்கு கேவலம் என்றால் என்ன என்று தெரியாது....

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Anonymous said...

Mt. Srilankan marmayogi u don't want to ender our Tamil nadu matters. We know what we have to do. I think u got some money in Srilankan and Indian government.

Anonymous said...

This is not only vaiko here..... Have lot of puplice organastion together .... U can't say what ever u want.

Anonymous said...

Don't say any think about mr. Uthaya Kumar he is the great leader now. What u did mr. Marmayogi. U can like write stupit comments only.

Anonymous said...

We are support Koodankulam. Raja.

Anonymous said...

மர்மயோகி வீட்டுக்கு பக்கத்துல அனு உலை வந்தாத்தான் தெரியும் வேதனை,.,

Unknown said...

கூடங்குளத்தில் இருந்துதான் தமிழகத்துக்கு மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதில்லை.நமக்கு தேவையான மின்சாரத்தை மட்டும் நாம் உற்பத்தி செய்து கொள்ள அனஊலையே இங்கு தேவை இல்லை.பன்னாட்டு நிறுவனங்களின் லாபதிர்ககவும் உள்நாட்டு அரசியல்வாதிகளின் லாபதிர்ககவும் நம்மில் ஒரு இனமே துன்பப்படுதப்படுகிறது. வரும் நாட்களில் அவர்களை தீவிரவாதியாகவும் முத்திரை குத்தும் வாய்ப்பும் உள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு வாச்சாத்தி மக்களுக்கு நிகழ்ந்த நிலைமை தான் இன்று இவர்களுக்கும். நதிநீர் என்னும் இயற்கை வளத்தையே நமக்கு தர மறுக்கும் அண்டை மாநில இன வெறியர்களின் அரசியலுக்காக இங்கே நம் மக்களை நாமே அடித்து விரட்டுகிறோம் என்பதை எப்போது தான் நாம் உணரப்போகிறோம்.

Unknown said...

நம் நாட்டில் எந்த மாநிலத்திலும் ஒதுக்கொள்ளப்படாத ஒப்பந்தம் தான் இந்த அணுஉலை ஒப்பந்தம் நம் மக்களை அழித்து மற்ற மாநிலங்களுக்கு மின்சார சேவை செய்ய இந்த கேடுகெட்ட அரசாங்கத்துக்கும் அரசியல்வாதிகளுக்கும் என்ன உரிமை உள்ளது?

Unknown said...

மர்மயோகியின் முட்டாள்தனமான வார்த்தைகளுக்கு நான் வருந்துகிறேன்.நண்பா இது வெறும் செய்தியோ வேடிக்கையோ அல்ல,ரத்தமும் தசையும் கொண்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் வருங்காலம். அவர்கள் சந்ததியினரின் எதிர்காலம்.அலட்சியப்படுத்தினால், ஹிரோஷிமா நாகசாகி வரை செல்ல தேவை இல்லை நம் போபால் மக்களுக்கு ஏற்பட்ட அவல நிலை தான் இவர்களுக்கும். என்றும் மக்களுக்காக போராடுவோம் மக்களோடு போராடுவோம். போராட்டம் மட்டுமே மக்களின் வாழ்வுரிமையை நிலை நாட்டும்.