Sep 11: அமைதி வழியில் போராட்டம் நடத்தி வரும் கூடங்குளம் மக்கள் மீது அரசு பயங்கரவாததின் ஏவல் நாய்களான போலீஸ், கொடிய தாக்குதல்களை மேற்கொண்டு உள்ளது. இதை சிந்திக்கவும் இணையத்தளம் வன்மையாக கண்டிக்கிறது.
மக்கள் தலைவர் உதயகுமார் கைதாக விருப்பம்: கூடங்குளம் சுற்று வட்டாரப் பகுதியில் பதற்றத்தை தனிக்க நான் (உதயகுமார்), ஜேசுராஜன், புஷ்பராயன், முகிலன் ஆகியோர் இரவு 9 மணி அளவில் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் கூடங்குளம் காவல்நிலையத்தில் கைதாக விரும்புகிறோம். இதனால் நாங்கள் தோற்றுவிட்டதாக கருத முடியாது. அறவழியில் எங்கள் போராட்டம் தொடரும். மேலும் பதற்ற சூழ்நிலையை தனிக்கவே நாங்கள் கைதாக விரும்புகிறோம் என்று கூறியிருக்கிறார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இம்மாத இறுதியில் மின் உற்பத்தி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. கூடவே அணு உலையில் யுரேனியம் எரிபொருளை நிரப்ப சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. உள்ளூர் மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பையும் மீறி இந்த அனுமதியை பயங்கரவாத அரசுகளும் நீதிமன்றங்களும் வழங்கியிருக்கின்றன.
இந்திய பயங்கரவாத அரசு, ஜனநாயக நாட்டில் அமைதி வழியில் போராட்டம் நடத்திய மக்கள் மீது தீவிரவாத வன்முறை தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. அமைதியான வழியில் சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட மக்கள் மீது தமிழக காவல்துறை கொடூரமாக தடியடி மற்றும் கண்ணீர் புகை தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இத்தாக்குதலில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தில் போராடிய மக்கள் மீது போலீஸ் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அந்தோணி ஜார்ஜ் மீனவர் கொல்லப்பட்டார். இதனால் மணப்பாடு, குலசேகரப்பட்டினம், திருச்செந்தூர் அமளிநகர், உவரி, பெரியதாழை, ஆழன்தலை, கூடுதாழை, கூட்டப்பனை, உள்ளிட்ட மீனவ கிராமங்கள் பதற்றத்தில் உள்ளன.
அரசியல் கட்சிகள் கண்டனம்: 1). பாட்டாளி மக்கள் கட்சி: கூடங்குளம் தடியடியை கண்டித்து பாமக சார்பில் தமிழகம் முழுவதும் நாளை (11.09.2012) போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள் கண்டனம்: 1). பாட்டாளி மக்கள் கட்சி: கூடங்குளம் தடியடியை கண்டித்து பாமக சார்பில் தமிழகம் முழுவதும் நாளை (11.09.2012) போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
2) SDPI கட்சி: இக்கட்சியின் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடன்குளத்தில் போலிசால் நடத்தப்படும் அக்கிரமங்களை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்க்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
3). தமிழக வாழ்வுரிமைக் கட்சி: இக்கட்சியின் நிறுவனர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக கடந்த ஓராண்டு காலமாக அமைதி வழியில் போராடி வந்த மக்கள் மீது தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகள் வீசி, துப்பாக்கிச் சூட்டை நடத்திய காவல்துறையின் செயல் கண்டனத்துக் குரியது என்று தெரிவித்துள்ளார்.
4). ஊழலுக்கு எதிரான அமைப்பு மற்றும் அன்னா ஹசாரே குழு கண்டனம்: கூடங்குளம் அணு உலை பகுதியில் போலீஸ்சால் நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல்களுக்கு அன்னா ஹசாரே குழு மற்றும் ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பினை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த மூத்த வழக்கரிஞ்சரான பிரசாத் புஷன் கூறியதாவது, இது மத்திய, மாநில அரசுகளின் சகிப்பற்ற தன்மையையே காட்டுகிறது. இது தொடர்பான ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
5). மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறன்: கூடங்குளத்தில் அமைதியாக போராடிய மக்கள் மீது மிகக்கொடுமையான முறையில் காவல்துறை தாக்குதல் நடத்தியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். அறவழியில் போராட்டம் நடத்துவதற்கு சட்டம் அங்கீகரித்துள்ளது. சட்டத்தை மதிக்காமல் தடியடி நடத்திய காவல்துறைக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று திரள வேண்டும்.
6). தேமுதிக தலைவர் விஜயகாந்த்: கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வரும் போராட்டக் குழுவினர் மீது போலிஸ் தடியடி நடத்தியுள்ள சம்பவம் முற்றிலும் ஜனநாயக விரோத செயலாகும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். பாமர மக்கள் கூடியிருந்த இடத்தில் எடுத்த உடனேயே கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவது என்பது அந்த மக்களை அரசு ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.
7). நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தமிழக அரசின் இந்த காட்டுமிராண்டி தனத்தை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் இதற்கெல்லாம் ஒரே தீர்வு தங்கள் அரசியலை தாங்களே நிர்ணயிக்கும் சக்தியாக தமிழர்கள் உருவாகி தமிழர் அரசை நிறுவவேண்டும்.. கூடங்குளம் மக்களின் நியாயமான போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்போம். அவர்களின் மீது அடக்குறை ஏவிவிட்ட இந்த இக்கட்டான கட்டத்திலும் அவர்களின் போராட்டத்திற்கு உறுதியாக துணை நிற்ப்போம்.
8). விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்: அறவழியில் போராடும் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், அவர்களது கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காமல் தமிழக அரசு காவல்துறையை ஏவி அவர்களை மிரட்டுவதும், தாக்குவதும் கடுமையான கண்டனத்துக்குரியது. இதுவரை கூடங்குளம் அணு உலையைப் பார்வையிட வந்த அரசு இயந்திரத்தைச் சார்ந்த எவரும் மக்களைச் சந்தித்துப் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
10) மனித நேய மக்கள் கட்சி (ம.ம.க): கூடங்குளத்தில் இன்று காலை காந்திய வழியில் போராடி வரும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, பத்திரிக்கையாளர்களையும் தாக்கிய காவல்துறையின் அராஜகப் போக்கை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தொண்டர்கள், மனித உரிமை ஆர்வலர் அ.மார்க்ஸ் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
9) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில்: கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுமின்நிலையத்தில் யுரேனியம் நிரப்புவதை நிறுத்தக்கோரி அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸார் நடத்திய தடியடி, கண்ணீர் புகை தாக்குதல்கள் ஆகியவற்றை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது என்று அதன் தமிழக தலைவர் தெரிவித்தார். மேலும் அணுமின் சக்தி ஆபத்தானது என்ற கொள்கையில் தங்கள் இயக்கம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
10) மனித நேய மக்கள் கட்சி (ம.ம.க): கூடங்குளத்தில் இன்று காலை காந்திய வழியில் போராடி வரும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, பத்திரிக்கையாளர்களையும் தாக்கிய காவல்துறையின் அராஜகப் போக்கை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தொண்டர்கள், மனித உரிமை ஆர்வலர் அ.மார்க்ஸ் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
11). மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: ஒரே இடத்தில், ஓராண்டுக்கும் மேலாக, அறவழியில் போராட்டம் நடந்த வரலாறு, இந்தியாவில் வேறு எங்கும் நிகழ்ந்ததில்லை. சாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து, அம்மக்கள் போராடி வருகின்றனர். இந்த அமைதிவழி போராட்டத்தை தடியடி நடத்தி, கண்ணீர்ப்புகை வீசி தாக்கியதோடு, கூடங்குளத்தில் தெருவில் போவோர் வருவோரையெல்லாம், போலீசார் கடுமையாகத் தாக்கி உள்ளனர். கடற்கரை நகரங்களில் பெரும் பதற்றம் ஏற்படுவதற்கு காவல்துறையின் நடவடிக்கைகளே முழுக்காரணம். இதற்க்கு மதிமுக சார்பில் பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு அரசு, கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்க அனுமதிக்கக் கூடாது. அப்பகுதி வாழ் மக்கள் மீது போடப்பட்டு உள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.
கூடங்குளம் மக்கள் போராட்டத்திற்கு குவியும் ஆதரவு: கூடங்குளம் மக்கள் போராட்டத்திற்கு தமிழகம் மட்டும் அல்லாது தேசிய அளவிலும் ஆதரவு அதிகரித்துள்ளது. அன்னா ஹசாரே குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக சொல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது. கூடங்குளம் போராட்டத்திற்கு ஆரவாக கன்னியாகுமரி, மற்றும் தூத்துக்குடி மாவட்ட கடலோர மீனவர் கிராமங்களும் போராட்டத்தில் குதித்துள்ளன. இதனால் வங்க கடலோரம் பதட்டம் நிலவுகிறது.
கேரளா மாநிலத்தின் எதிர்க்க கட்சி தலைவர் சச்சிதானந்தம் (கம்யூனிஸ்ட்) கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் கூடங்குளத்திற்கு நேரில் விஜயம் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளார். தமிழக போலி கம்யூனிஸ்ட்கள் கூடங்குளம் அணு மின்நிலைய போராட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வந்த நிலையில் கேரளா கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்திருப்பது இங்கே கவனிக்க தக்க விடயமாகும்.
கூடங்குளம் போராட்டத்திற்கு எதிப்பு: தினமலர் ( தினமலம்) நாளிதழ் வழக்கம் போல் உதயகுமார் ஓட்டம் என்று செய்தி போட்டு தன் மதவாத அரிப்பை தீர்த்து கொண்டது. தமிழகத்தின் கையாலாகாத முதல்வர் ஜெயா போலீஸ்சாரின் செயலை ஆதரித்து போராட்டகாரர்களின் மாயவலையில் விழவேண்டாம் என்று கேட்டு கொண்டார். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் போலீஸ் அராஜகத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டார்.
மக்கள் தலைவர் உதயகுமார் கைதாக விருப்பம்: கூடங்குளம் சுற்று வட்டாரப் பகுதியில் பதற்றத்தை தனிக்க நான் (உதயகுமார்), ஜேசுராஜன், புஷ்பராயன், முகிலன் ஆகியோர் இரவு 9 மணி அளவில் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் கூடங்குளம் காவல்நிலையத்தில் கைதாக விரும்புகிறோம். இதனால் நாங்கள் தோற்றுவிட்டதாக கருத முடியாது. அறவழியில் எங்கள் போராட்டம் தொடரும். மேலும் பதற்ற சூழ்நிலையை தனிக்கவே நாங்கள் கைதாக விரும்புகிறோம் என்று கூறியிருக்கிறார்.
அணு உலைக்கு ஆதரவாக கூறப்படும் பித்தலாட்டமான வாதங்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். இடிந்தகரை மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக துணை நிற்கவேண்டும் என்று சிந்திக்கவும் இணையத்தளம் சார்பாக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
13 comments:
Police cannot keep silent until the protesters are trying to enter the plant. Police had given several warnings. This is the right way to handle the protester.
இதே அணுஉலையை கேரளாவிலும், கர்நாடகாவிலும், குஜராத்திலும் அமைக்க ராஜீவ் அரசு முனைந்த போது, ஆண்மையுள்ள அப்பகுதி அரசியல்வாதிகள் கூடவே கூடாது என கடிவாளம் போட்டார்கள். தமிழ்நாடுதான் இளிச்சவாயர்கள் இருக்கும் மாநிலமாயிற்றே. இங்கு அணு உலை அமைக்கப்பட்டது
இந்த அணு உலை திட்டம் சுமார் 20 ஆண்டுகளாக நடைப்பெற்று வருகிறது, அப்பொழுது எதிர்ப்பில்லை
இந்த அணு உலை திட்டம் சுமார் 20 ஆண்டுகளாக நடைப்பெற்று வருகிறது, அப்பொழுது எதிர்ப்பில்லை
மக்களின் போராட்டம் நியாயமானதாக இருக்கலாம்! ஆனால் உதயகுமாரை பற்றி வரும் செய்திகள் சரியாக இல்லை! இந்த போராட்டம் ஆரம்ப காலத்திலேயே தொடங்கி இருக்க வேண்டும். இப்போது முழு பாதுகாப்புடன் யாருக்கும் பாதிப்பு இல்லாதவாறு அணு உலை செயல்பட வேண்டும்.
/// Police cannot keep silent until the protesters are trying to enter the plant. Police had given several warnings. This is the right way to handle the protester///
சரி உங்கள் கருத்து படியே வைத்து கொள்வோம், அணு உலையை நோக்கி வந்த மக்களை தாக்கியதோடு நில்லாமல் போலீஸ் ஏன் கூடங்குளம் மற்றும் இடிந்தகரை ஊருக்குள் சென்று மக்களை தாக்க வேண்டும். ஏன் மணப்பாடு என்கிற கடற்கரை கிராமத்தில் அமைதி வழியில் மக்கள் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்த வேண்டும். அமைதி வழியில் போராட்டம் நடத்த மக்களுக்கு உரிமை உண்டு. கூடங்குளம் போராட்டம் என்பது மிகபெரிய மக்கள் சக்தி போராட்டம். அதை வெறுமனே ஆயூதம் கொண்டு ஒடுக்கி விட முடியாது.
by // தமிழன்.
//இந்த அணு உலை திட்டம் சுமார் 20 ஆண்டுகளாக நடைப்பெற்று வருகிறது, அப்பொழுது எதிர்ப்பில்லை//
தொடக்கத்திலிருந்தே திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின்
நிலையம் அமைவதை பல்வேறு தரப்பினர் எதிர்த்து வந்தனர்.
ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஜப்பானில் ஃபுகுஷிமாவில் நிக்ழ்ந்த அணு உலை விபத்திற்குப் பின்னர் இந்த எதிர்ப்பு தீவிரமடைந்தது.
AZAD NELLAI
ITS HAVE ALL NEWS ABOUT KOODAN KULAM. IT IS VERY GOOD ARTICLE.
ITS HAVE ALL NEWS ABOUT KOODAN KULAM. IT IS VERY GOOD ARTICLE.
ஏன் மணப்பாடு என்கிற கடற்கரை கிராமத்தில் அமைதி வழியில் மக்கள் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்த வேண்டும்.//போலீஸ் ஸ்டேசனில் மரணதாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்...கான்ஸ்டபிள் உயிரைக் காக்க சுடாமல் என்ன செய்வார். அவர் செத்திருந்தால் 'போலீஸ் சரிவர கையாளவில்லை என்று ஒரு பதிவு போட்டிருப்பீர்கள்' இல்லையா?
அணு உலைக்கு ஆதரவான பித்தலாட்டங்களை நினைத்தால் வேதனையும் ஆவேசமும் மீறி சிரிக்கத் தோன்றுகிறது. சுயலாபங்களுக்காக தத்தம் தலையிலும் மண்ணைப் போட்டுக்கொள்ளும் அவர்களை என்ன சொல்ல?!
வணக்கம் தோழரே நலமா.. சரியாக சொன்னீர்கள்... அணு உலை தீமை என்று தெளிவாக தெரிந்தும் அது தங்கள் ஊரில் வரவில்லை சாவப்போவது கூடங்குளம் மக்கள்தானே என்கிற சுயநலம் சிலருக்கு. அப்படி பட்ட சுயனலக்காரர்களே இந்த அணு உலையை ஆதரிப்பது. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
கேவலமாக செய்திகளை திரித்து எழுதுவதில் தினமலருக்கு நிகர் யாரும் இருக்க முடியாது.உதயகுமார் போராட்ட பந்தலுக்கு வந்து போகிறார் இப்படி இருக்க அவரை ஒளிந்து கொண்டார், தப்பி ஓட்டம் என்று செய்தி போட்டு கீழ்த்தரமான பத்திரிகை என்று நிருபித்து வருகிறது.
by.....தமிழன்.
Post a Comment