Jul 6, 2012

எரிச்சல் கொடுக்கும் எடியூரப்பா! குடைச்சல் எடுக்கும் அத்வானி!!


பெங்களூர்: july, 7: கர்நாடக முதல்வரை மாற்ற வேண்டும் என்று எடியூரப்பா ஆதரவாளர்கள்  கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அங்கு சட்டசபையைக் கலைத்துவிட்டு தேர்தலை  நடத்த பரிந்துரை செய்யலாம் என்று பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி  தெரிவித்துள்ளார்.
சதானந்த கவுடாவை மாற்றிவிட்டு ஜகதீஷ் ஷெட்டரை முதல்வராக்க வேண்டும் என்று  முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆதரவாளர்கள் நெருக்கடி கொடுத்து  வருகின்றனர். இதற்கு பா.ஜனதா மேலிடமும் சம்மதித்துவிட்டதாகவும், ஜனாதிபதி  தேர்தலுக்குப் பின்னர் ஜகதீஷ் ஷெட்டர் முதலமைச்சர் ஆக்கப்படலாம் என்றும்  கூறப்படுகிறது.
இந்நிலையில் எடியூரப்பாவும், அவரது ஆதரவாளர்களும் விடுக்கும் மிரட்டல் மற்றும்  நெருக்கடியால் எரிச்சலடைந்துள்ள அத்வானி, சட்டசபையைக் கலைத்துவிட்டு  முன்னதாகவே தேர்தலை நடத்த பரிந்துரை செய்யுமாறு கர்நாடக பா.ஜனதாவினரை  கேட்டுக் கொண்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீவிரவாத பி ஜே பி கட்சிக்குள் குடும்பி பிடி சண்டையால் நிம்மதியில் காங்கிரஸ்.