Jun 26, 2012

மஹராஷ்ட்ரா சிறைச்சாலையின் அதிர்ச்சி தகவல்!! TISS!!


புதுடெல்லி:மஹராஷ்ட்ரா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகளின் சமூக சூழல்களை குறித்து ஆய்வு செய்த டாட்டா இன்ஸ்ட்யூட் ஆஃப் சோசியல் சயன்ஸஸ்(Tata Institute of Social Sciences (TISS)) வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சிகரமான உண்மைகள் அடங்கியுள்ளன.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள 90 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் நிரபராதிகள் என்றும், க்ரிமினல் கும்பல்களுடன் அவர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் TISS அறிக்கை கூறுகிறது. சில வழக்குகளில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே போலீஸ் கைது செய்கிறது என்று TISS அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
15 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 3 ஆயிரம் முஸ்லிம் கைதிகளில் 70 சதவீதம் பேர் விசாரணை கைதிகள் ஆவர். தடா, மோக்கா போன்ற தீவிரவாத தடுப்புச் சட்டங்களின் கீழும், அஃபிஸியல் சீக்ரெட் சட்டத்தின் கீழ் உளவாளிகள் என முத்திரைக் குத்தப்பட்டும் இவர்களில் பெரும்பாலோர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவர்கள் கடுமையான குற்றங்கள் எதுவும் செய்யவில்லை என்று TISS ஆய்வறிக்கை கூறுகிறது.
25.4 சதவீதம் பேருக்கு வழக்குகளை வாதிட வழக்கறிஞர்கள் இல்லை.
TISS க்காக க்ரிமினாலஜி அண்ட் ஜஸ்டிஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் வர்கில் டாக்டர்.விஜய் ராகவனும், ரோஷ்னி நாயரும் ‘மஹராஷ்ட்ரா சிறைகளில் முஸ்லிம் சமூகத்தின் சமூக பொருளாதார சூழல் மற்றும் மறுவாழ்வுக்கான தேவைகள்’ என்ற தலைப்பில் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

3 comments:

Seeni said...

ada paaavikalaaa!

Anonymous said...

இதுதான் சனநாயக இந்தியா.????? மதசார்பற்ற நாடு ?????? இந்தியாவை ஆட்சி செய்வது பாசிச இந்துத்வாதான் என்பது உலகறிந்த உண்மை. பின்னே எப்படி முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கும்.

நன்றி

Seeni said...

இந்த பதிவை-
வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்!

வலைச்சரதுக்குவருகை தாருங்கள்!

http://blogintamil.blogspot.sg/