வரலாற்றிலிருந்து நாம் தெரிந்து கொண்ட மிக பெரிய உண்மை என்ன என்றால் வரலாற்றிலிருந்து நாம் எதுவுமே தெரிந்து கொள்ளவில்லை என்பது தான் - இது தத்துவம். என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்?
1876 பிரிட்டிஷ் இந்தியாவில் பெரும்பஞ்சம்...
பஞ்சநிவாரண பலனாகக் கிடைத்தது பக்கிங்ஹாம் கால்வாய் !! எந்த ஆங்கில சிப்பாயும் இந்தியப்பெண்களை வன்புணர்வு செய்யவில்லை..
1947 ல் சுதந்திரம் கிடைத்தது..
பிரதமர் கொடியேற்றினார்.. 1966 சுதந்திர இந்தியாவில் பீகார்பஞ்சம்
1968 கூலிகேட்டால் சொர்க்கம்கிடைக்கும் ,
கீழ்வெண்மணியில் 44 உழைப்பாளிகளுக்கு சொர்க்கபதவி..
மறந்துட்டோம்..
1997 ல் சுதந்திர பொன்விழா
பிரதமர் கொடியேற்றினார், மிட்டாய் தின்றோம் கைத்தட்டினோம்
இருநாட்டு அரசியல்சகுனிகளின் சூழ்ச்சியில் கார்கில்யுத்தம்
செத்தவன் சகோதரன்...தெரியாமல் கொண்டாடினோம் வெற்றியை..
மார்தட்டி சென்ற இளைஞன் சவப்பெட்டியில் திரும்பினான்..
அதிலும் ஊழல் செய்தார்...மறந்து...? மன்னித்துவிட்டோம்..
தொடர்ந்த பொன்விழா ஆண்டுசிறப்பாய்..
கூலிகேட்டவர்க்கு சொர்க்கம் கொடுக்கும் கொள்கைப்படி 1999 தாமிரபரணி சம்பவம் அட...மறந்தே போனோம்..!! 2000 மில்லேனியம் 21 ம் நூற்றாண்டு..குஜராத்தை கொளுத்தி கொண்டாடினார் அரசியல் சதுருக்கு அண்ணன் தம்பி பலி..அக்கா தங்கை சூறையாடல் மறந்துட்டோம்...ஆமா மறந்துட்டோம்..
தோணியில இந்தியா கொடிகட்டி கடல்ல இரங்கற நம்ம தமிழ் மீனவங்களை கொத்துக்கொத்தாக் கொன்னுப் போடுவான் தமிழனைக் கொன்னழிக்கிற சிங்கள இராணுவத்துக்கு நம்மஊருல விருந்தும்பயிற்சியும்.. சுதந்திர இந்தியன் மறந்துடுவான்... மறந்துட்டீங்கல்ல.. அதேதான் மறந்துடுங்க..
பீரங்கி , புண்ணாக்கு ,பொறம்போக்கு, அட திட்டலப்பா ..
ஏற்றுதி.. இறக்குமதி, சவப்பெட்டி, ரயில் பெட்டி, ஓட்டுப் பெட்டி, ஸ்பெக்ட்ரம், சுதந்திர இந்தியா சாதனை படைத்த ஊழல்கள்!! மறந்துட்டோம்ல...ஆமாமா மறந்துட்டோம்..!!2011 ஆகஸ்ட் 15 , பிரதமர் கொடியேற்றினார்
மிட்டாய் தின்றோம்...கைத்தட்டினோம்
2020 ல் ஆப்ரிக்காவை எட்டிப்பிடிப்போம் பட்டினிச்சாவில்..!!
உலகின் வீடில்லாதோர் பட்டியலில் ஆறாமிடம் நமக்குத்தான் !!
பெண்கள் வசிக்க ஆபத்தானநாடுகள் பட்டியல்ல மூன்றாமிடம் நமக்கேதான் !! மறந்துடுவோம்..........?ரௌத்திரம் பழகு
யாழினி
16 comments:
வணக்கம் யாழினி, இந்தியாவின் போலி சுதந்திர தின கொண்டாட்டம் பற்றி ரொம்ப அருமையான சொல்லி இருக்கீங்கள். வாழ்த்துக்கள் யாழினி.
by - tamil venthan
அற்புதமான பதிவு! வாழ்த்துக்கள் யாழினி, உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். நட்புடன்- மன்மதன்.
thank you for your message.
சரியான நேரத்தில் எழுதப்பட்ட பதிவு, உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து படித்து வருகிறேன். ஈழம் குறித்த உங்கள் பதிவுகள் மிகவும் நன்று. அது என்ன ரௌத்திரம் பழகு பழகு யாழினி என்று போடுகிறீர்களே அது என்ன அருத்தம் ரௌத்திரம் பழகு பழகு என்றால் என்ன? நட்புடன் - சாந்தி.
நல்ல பதிவு வாழ்த்துக்கள் யாழினி, நான் உங்கள் எழுத்துக்களின் தீவிர வாசகி உங்கள் எழுத்து பணி தொடர வாழ்த்தும் அன்பு தோழி - சுகாசினி.
TREMENDOUS EFFORT. NOT AN EASY MATTER TO INSERT INTO THE SOUL EASILY AS YOU DID. IT IS HEAVY. YES IT IS HEAVY I FEEL IN MY SOUL.
//பெண்கள் வசிக்க ஆபத்தானநாடுகள் பட்டியல்ல மூன்றாமிடம் நமக்கேதான் !! மறந்துடுவோம்..........?
ரௌத்திரம் பழகு யாழினி //
பெண்ணடிமையா ? பெண்ணுரிமையா ?
சுட்டிகளை சொடுக்கி படித்து
சிந்திப்போமா?
>> இந்தியாவில் வளர்வது பெண் அடிமைத்தனத்தனமா? பெண் உரிமையா? இந்தியாவில் 2009ல் நடந்த பெண் (வன்)கொடுமைகள்.
>>
பெண்கள் மிருகங்களை விட கேவலமானவர்களாமே ? ??
>> பெண்களுக்கு மோட்சம் கிடையாது. அப்படி வேண்டுமென்றால் அவள் இன்னொரு பிறவியெடுத்து ஆணாய்ப் பிறந்தால்தான் மோட்சம் .
>> உடலுறவுக்கு மோட்சத்தில் கட்டுபாடில்லை. தட்டுபாடில்லை. வேண்டும் எண்ணிக்கைகளில் உனக்கு அனுபவிக்க தேவடியாள்கள் வேண்டுமா? நீ விரும்பிய பெண்கள் வேண்டுமா?
>> “பெண்களுக்கு எட்டு வயதுக்குள் திருமணம் செய்து விடு” - வேதம். இல்லை யென்றால் அதாவது ருதுவானபின் கல்யாணம் செய்தால் அவளுடைய மாதவிலக்கில் வெளிப்படுவதை அவளுடைய அப்பனே சாப்பிட வேண்டும். --குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்து வைக்கக்கூடாது “ உத்தரவிட்ட இந்தியாவின் ஆங்கிலேய அரசாங்கம்”.
>> பிராமண பெண்ணும் ஒரு சூத்திரச்சிதான். அவளுக்கு வேதத்தை தொட , படிக்க, வேதம் கண்பட, ஓதும் ஓசை காதில் பட அருகதை கிடையாது. கல்யாணத்தின் போது சீதைக்கு வயது ஆறேதான்.
>> . இறந்த கணவனுடன் அவன் சிதையிலேயே மனைவியையும் உயிருடன் எரித்துவிடு.? வேதம்
>> ஸ்திரிகளுக்கு எதுக்கு சொத்து? ஓடிப்போயீடுவா...!!!. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு.
>> பெண்களுக்கு கல்வி தேவையில்லை, சொத்தில் பங்கு கிடையாது.ஆணுக்கு அடங்கியிருக்க வேண்டும்..
Ethu nalla pathivu panigal thodarattum . Nanri .
It's very good post, thank u so much for ur writing - what is the meaning for rawthiram palagu. Can u say the meaning of the word please.
It's tru. Thank u for posting this.
Arumaiyaana pathivu aalntha karuththukkal, sithikka thoondum visayangal. Nanri yazlini.
Sinthikka vaikkum pathivu, vaalththukkal. - by visu
Nalla Pathivu nanti - by malar
Nalla pathivu. Vaalththukkal yazlini. By- Raja
Nanri thamilan ungal suttigalai sodukki padiththen nalla payan ulla thagavalgal kidaiththanana. Nanri. By - Tamil selvi
Inthiyaavin pooli mathachchaarpinmai patri oru pathivu podungal. Nalla pathivu vaalththukkal.
Post a Comment