Jul 20, 2011

ரஜினி மாயையை ஊட்டி வளர்க்கும் விஜய் TV!

JULY 21, விஜய் TV ன் சூப்பர் சிங்கர் பாட்டு போட்டியில் இப்பொழுது நடைபெறுவது ரஜினி சுற்று. இதில் அவர் உங்களுக்கு யார் என்று கோபிநாத்தால் உள்ளே அமர்ந்திருக்கும் விசேச பார்வையாளர்களிடம் கேட்கப்பட்ட பொழுது, "அவர் ஒரு கடவுள்" என்று ஆரம்பித்து வைக்கிறார் திருவாளர் ஸ்ரீனிவாஸ் என்ற பிரபலமான பாடகர். அவர் இந்த பாடல் போட்டியின் ஒரு நடுவர்.

விஜய் TV ஒரு ஜன ரஞ்சகமான செய்தி, மற்றும் பொழுதுபோக்கு ஊடகம். எந்த ஊடகமும் பொருளாதார இலாபத்தை மையமாக வைத்துத்தான் ஆரம்பம் செய்யப்படுகிறது. ஆனால் அதில் அந்த பிராந்தியத்தின் மொழி, தேசம், இனம் சார்ந்த பண்புகளை கட்டிக்காக்கக்கூடிய பொறுப்புணர்வும், பகுத்தறிவும் கலந்திருக்க வேண்டும்.

ரஜினிக்கு உடல் நிலை சரியில்லாததினால் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு ஒரு தாய் வந்திருக்கிறாள். அவளும், ரஜினியை கடவுள் என்கிறாள்,  ரஜினி நலம் பெற மொட்டைகள் அடித்துக்கொண்டு சில புத்திசாலிகள் இப்படி ஆரம்பிக்கிறது நிகழ்ச்சி.  என்ன நடக்கிறது இங்கே? யாரை வேண்டுமானாலும் கடவுளாக்கி விடும் அளவுக்கு இவ்வளவு அறிவு வறட்சி எப்படி வந்தது எம் தமிழ் இனத்துக்கு? 

கோபிநாத் கேள்வி கேட்கும் தொனியிலே அறிவுடைய மக்களுக்கு புரியும் இந்த மக்கள் எவ்வளவு புத்தி மழுங்கி விட்டார்கள் என்பது. கோபிநாத், "ஒரே மனிதரை, எத்தனை வகையில் மக்கள் மதிக்கிறார்கள்? ஒருவர் என் கடவுள் என்கிறார் ஒருவர் மனிதக்கடவுள் என்கிறார் ....., ஒருவர் என் ஆத்மா என்கிறார்...., ஒருவர் என் உயிர் என்கிறார்....., ஒருவர் என் வாழ்வு என்கிறார்...., நான் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துவிட்டேன் என்று ஒருவர்.... அடேங்கப்பா" என்று கோபிநாத் சொல்லும்பொழுது அவரால் வெளிப்படுத்த முடியாத ஒரு அங்கலாய்ப்பும் இவ்வளவு அறிவு கெட்டு விட்டார்களே என்ற விசனமும் உள்ளூரதெரிகிறது.

இதுபோன்ற காட்சிகளும், தொடர்களும் ஒரு பக்குவமற்ற, கடைநிலை பார்வையாளர்களை, சமுதாயத்தை உருவாக்கும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. ரஜினியை "அவர் ஒரு கடவுள்" என்று ஆரம்பம் செய்து வைத்த ஸ்ரீ நிவாஸ் என்ற பாடகர் இதே போன்ற நிகழ்ச்சியை விஜய் TV ரஜினி போன்ற புகழ் பெற்ற நடிகருக்கு கேரளாவில் நடத்தி இருந்து அவரிடம் இதே கேள்வியை கேட்டிருந்தால், "ரஜினி ஒரு கடவுள் என்று சொல்லி இருப்பாரா? அப்படி சொல்லி இருந்தால் ஸ்ரீ நிவாசை நிம்மதியாக தூங்க விட்டிருப்பார்களா கேரள மக்கள்?  ஸ்ரீ நிவாசுக்குத் தெரியும் தமிழகம் வந்தாரை வாழவைப்பது மட்டுமல்ல, வாழ்வோர் வாந்தி எடுத்தாலும் அது நல்ல உணவு என்று ஏற்றுக் கொள்ளும் என்று.

இந்த பாட்டு போட்டி சுற்றுகளில் ஆன்மீகச்சுற்று என்று ஒன்று வைத்தார்கள். அதில் அனைத்தும் இந்துமத ஆன்மீக பாடல்களே போட்டியாளர்களால் பாடப்பட்டது. இந்த ஆன்மீக சுற்று போட்டியாக நடத்தப்படாமல் ஒரு ஷோவாகவே நடத்தப்பட்டது. அந்த சுற்றுக்கு மதிப்பெண்களும் இல்லை வெளியேற்றமும் இல்லை. அப்படி இருக்கையில் அதில் குறைந்த பட்சம் ஒரு இஸ்லாமிய பாடல் மற்றும் ஒரு கிருஸ்தவ பாடலையாவது பாடச்சொல்லி ஒளிபரப்பி இருக்கலாம். ஒரு மதச்சார்பற்ற நாட்டில் எல்லா மதத்தினராலும் பார்க்கப்படுகிற ஒரு பொது ஜன ஊடகத்தில் இப்படி ஒரு மத சார்ப்பு, அதே நேரம் மனிதனை கடவுள் என்று சொல்ல வைப்பது, தற்கொலையை ஊக்கப்படுத்துவது போல் உள்ள பேச்சுகளை சென்சார் இல்லாமல் அப்படியே வெளியிடுவது போன்றவை விஜய் டிவிக்கு அழகல்ல.

அதுபோல் நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும் என்ற நிகழ்ச்சியில் இந்த விஞ்சான யுகத்தில் மக்களை ஏமாற்றும் சாமியார்களை அவர்களுக்கு அதிசய சக்தி இருக்கிறது என்பது போல் காட்டுவது, ஒரு கோவிலில் காய்ந்த மிளகாயை போட்டு ஒரு யாகம் நடத்தப்படுகிறது அதற்க்கு சக்தி இருக்கிறது என்று கோபிநாத் புலம்புவது, இப்படி நடந்தது என்ன என்று உண்மை சம்பவத்தை காட்டாமல் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு கோபிநாத் தன் பேச்சாற்றல் மூலம் ஒரு பரபரப்பை ஏற்படுத்துகிறார். இது போன்ற நிகழ்ச்சிகள் மக்களை மேலும் மூட பழக்க வழக்கத்தில் மூழ்க செய்வதற்கே உதவும் என்பதை விஜய் டிவி புரிந்து கொள்ளுமா? நீயா நானா போன்ற நல்ல நிகழ்சிகளை அளிக்கும் விஜய் டிவி இதுபோல் உள்ள குறைகளை கலையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

19 comments:

Anonymous said...

என்கிட்டே வந்து ரஜினி யார்ருன்னு கேட்டிருந்தா ஒரு நடிகன் என்று சொல்லியிருப்பேன். உயிரை காப்பாற்றி கொடுக்கும் ஒரு மருத்துவரையோ, கல்விக்கண் திறந்த ஒரு ஆசிரியரையோ, சமூக மாற்றம்
செய்யும் ஆர்வலரையோ கொண்டாடாத இந்த சமுதாயம் , ஊடகங்கள் , சினிமா கூத்தாடிகளை வைத்து பிழைப்பு நடத்துவது கேவலம். உங்க பதிவு அறிவுள்ளவருக்கு புரியும். மற்றவருக்கு?

Anonymous said...

சரியா சொன்னீங்கள் இந்த ஏர்செல் சூப்பர் சிங்கர் த்ரீ இன்றைய நிகழ்ச்சியல் பாடிய கோவையை சேர்ந்த சந்திய பிரகாஷ் என்ற போட்டியாளரிடம் கோபிநாத் கேட்டார் ரஜினி உங்களுக்கு யார் என்று உடனே அந்த பையன் சொல்கிறார் கடவுள் மாதிரி என்று. இவர்களுக்கு அறிவு மழுங்கி விட்டது என்றே சொல்ல வேண்டும். ஏன் இந்த ரஜினி கிறுக்கு தலைக்கு ஏறி அலைகிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு மனிதனை புகழலாம் அதற்க்கு இப்படியா? கோபிநாத் நல்ல படித்தவர் பண்புள்ளவர் என்று நினைத்தேன் அவர் கேட்க்கும் கேள்வி ரஜினி உங்களுக்கு யார் என்ற கேள்வியே அர்த்தம் இல்லாத கேள்வி. இதன் மூலம் அவர்கள் இந்த சமூகத்துக்கு சொல்ல வரும் செய்தி என்ன?

Anonymous said...

ரஜினி ஒரு நல்ல நடிகர் அவ்வளவே அதை தவிர இந்த அளவுக்கு புகழ்வது என்பது மடத்தனம்.

Anonymous said...

பாடகர் சீனிவாஸ் மலையாளி அவர்களுக்கு தெரியும் தமிழர்கள் இளிச்சவாயர்கள் என்று. கேரளாவில் போயி ரஜினி கடவுள் என்று சொன்னாலோ, அல்லது வேறு யாராவது கேரளா நடிகரை கடவுள் என்று சொன்னாலோ இவரை கேரளா படித்த மக்கள் செருப்பால் அடிப்பார்கள். தமிழனுக்குத்தான் புத்தி கிடையாதே. புத்தி இருந்திருந்தால் ஈழத்தில் மக்கள் சாகும் பொது வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பானா? காவிரி தண்ணீர், முல்லை பெரியார் பிரச்சனை, கட்ச்சதீவு இப்படி ஒவ்வொரு விசயத்திலும் மவுனம் காட்பானா. மத்த மாநிலத்துகாரனாக இருந்தால் அப்போதே இந்தியாவை இரண்டாக்கி இருப்பார்கள்.

Anonymous said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்!

Anonymous said...

இந்த கோபிநாத் என் ரஜினி உங்களுக்கு யார் என்று கேட்கிறார்! இந்த கேள்வியே தவறு! இவர் இப்படி ஒரு இக்கட்டான ஒரு கேள்வியை கேட்டதும் ரஜினியை வைத்து ஏதாவது ஒரு வகையில் லாபம் அடைபவர்கள் அதிகபட்சமான புகழ்ச்சியாக கடவுள் என்று சொல்லி அதை வைத்து தங்களுக்கு ஏதாவது லாபம் கிடைக்குமா என்று பார்கிறார்கள். பாடகர் ஸ்ரீநிவாஸ் சொன்னது அவருக்கு முதல் வாய்ப்பு கொடுத்தது ரஜினிதான், இப்போது சூப்பர் சிங்கர்யில் இப்படி புகழ்ந்தால் அடுத்த படத்துக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லி இருப்பார். அது போல்தான் அந்த மொட்டைகளும் அவர்கள் ரஜினி ரசிகர் மன்றம் என்று வைத்து வசூல் பண்ணி தங்கள் நலனை பெருக்கி கொள்ளும் கூட்டத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

Anonymous said...

நீங்கள் விஜய் சினி அவார்ட் பார்க்கவில்லை என்று எண்ணுகிறேன். அதில் ரஜினியை வைத்து அடிப்பார்களே கூத்து அதுவும் ரஜினி மருமகன் தனுஷ் வந்து ஒரு பேப்பரை வைத்து ரஜினி சொன்னதாக வாசித்து காட்டுவதும்,

ரஜினிக்கு வழங்கப்பட்ட விருதை தான் வாங்கிகொண்டு போகாமல் ரஜினி சார்பில் எல்லோரும் வந்து வாங்க வாருங்கள் என்று ஒரு காமடி பண்ணுவார் வேற வழியே இல்லாமல் சின்ன நடிகர்கள் போயி இவர் கூட சேர்ந்து அந்த விருதுகளை வாங்குவார்கள். எல்லோரும் வாருங்கள் என்று சொல்வது யாரை அந்த அரங்கத்தில் உள்ள அனைவரையுமா? கடைசியில் பார்த்தால் 5 பேர் மாட்டும் இவர் கூட சேர்ந்து அந்த விருதை வாங்கி ரஜினிக்கு நல்லா மூக்கை அறுத்து விட்டார்கள். இது வெல்லாம் ஒரு பிழைப்பு. புகழ் என்பது தானா வரவேண்டும். நான் உனக்கு புகழ் பாடுகிறேன் நீ எனக்கு புகழ் பாடு இதுதான் அங்கே நடந்தது.

Anonymous said...

சரியான சமயத்தில் எழுதப்பட்ட பதிவு வாழ்த்துக்கள்.

Anonymous said...

ரொம்ப அருமையான பதிவு! எப்போ திருந்த போகிறார்களோ! தேவை இல்லாமல் ரஜினி என்று ஒரு மாயையை உண்டாகுகிரார்கள்.

Anonymous said...

நாங்கள் குஷ்புக்கே கோவில் கட்டி சாமி கும்பிட்டவர்கள்! ரஜினிக்கு கட்டாமல் இருப்போமா!

Anonymous said...

உங்களுக்கு பொறாமை அதனால்தான் ஒரே ரஜினியை தாக்கி போஸ்ட் போடுகிறீர்கள். நீங்கள் ரஜினி மாதிரி அழகா இல்லை என்ற பொறாமை, அவரை மாதிரி நடிக்க முடியவில்லை என்ற பொறாமை, சும்மா ஒரு வெப்சைட் வைத்து கொண்டு ஒரே ரஜனியை தாக்கி போஸ்ட் போட்டுகொண்டு வேற வேலையில்லை. ராமராஜன்.

Anonymous said...

இந்த புகழுக்கு அவர் தகுதி அற்றவர் என்பதே என் கருத்து. சும்மா வேஸ்ட்! - மணிமாறன்

Anonymous said...

it very interesting. thank you, keep it up.

PUTHIYATHENRAL said...

அன்புள்ள வாசகர்களுக்கு கருத்து சொன்னமைக்கு நன்றி! அதே நேரம் கருத்துக்களை பதியும் போது அந்த பதிவு சம்மந்தமான கருத்துக்களை உணர்சிகளை தவிர்த்து நளினமாக இடும்படி அன்போடு கேட்டு கொள்கிறேன். நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்.

Anonymous said...

ஏன் உங்களுக்கு ரஜினியை தாக்கி பதிவு போடலைனா தூக்கம் வராதோ? நான் நினைக்கிறன் நீங்கள் கமல் ரசிகர் அதனால்தான் இப்படி ஒரே ரஜனியை தாக்கி பதிவு போடுறீங்கள் என்பது என்கருத்து.

sivasubramaniyam said...

raji oru nalla nadikar, nalla thalaivarum kuda,manithanay manithanaka mattumay parkka vaydum.

IBFINDIA said...

நண்பரே www.ibfindia.com என்று ஒரு வெப்சைட் உள்ளது .இந்தியாவின் எந்த சேனல்களில் வரும் எந்த நிகழ்ச்சியை குறித்து complaint,commentsஆகியவற்றை நாம் எழுதி அனுப்பலாம் .நம்மை போன்ற ஒரு 200-300 நண்பர்கள் எழுதி அனுப்பினால் நிச்சயம் channel broadcaster க்கு அவர்கள் எச்சரித்து கடிதம் எழுதுவார்கள் ...
நன்றி

ஜெ. ராம்கி said...

ஏன்பா உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா

Anonymous said...

நீங்கள் எங்கள் இந்து மதத்தை கேவலப்படுத்தவெல்லாம் முடியாது. ஏனெனில் எங்கள் மதத்தில் எதுவும் நடந்த சம்பவங்களோ, நடந்ததாக ஆதாரமோ நிச்சயமாக கொண்டு வரமுடியாது.
எல்லாமே கற்பனையாய் மனித குளம் அமைதியோடு வாழ வேண்டும் என்று எங்கள் முன்னோர்கள் எழுதி
விட்டு சென்ற மனித வாழ்வை மேம்படுத்த எழுதப்பட்ட கதாபாத்திரங்கள்தான் ராமாயணம், மகாபாரதம்,
திருவிளையாடல், தசாவதாரம் போன்றவை எல்லாம். அவற்றில் வரும் நல்ல பல கருத்துக்களை எடுத்துக்கொண்டு
மீதியை விட்டுவிடுங்களேன். ஏன் எங்களில் அறியாத மாந்தர் செய்யும் காரியங்கள் போல் நீங்களும்
பதிலுக்கு செய்கிறீர்கள். *** தமயந்தி ***