JULY 19, சென்னை:தமிழ்நாட்டில் முந்தைய தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி திட்டம் தொடரவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியின் போது மாநிலத்தில் நிலவிலுள்ள மெட்ரிக் உள்பட நான்கு பாடத்திட்டங்களுக்கு பதிலாக 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் ஒரே கல்வியை வழங்கும் நோக்கில் சமச்சீர் கல்வி என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த கல்வியாண்டின் துவக்கத்திலிருந்து இத்திட்டம் துவங்கப்பட இருந்தது. இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவில் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க அரசு மீதான மக்கள் எதிர்ப்பு அலையின் பலனாக அ.இ.அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது.
பதவியில் அமர்ந்த உடனேயே மாணவர்கள் நலனையும், மக்கள் வரிப்பணத்தையும் கணக்கில் கொள்ளாமல் காழ்ப்புணர்வில் சமச்சீர் கல்வி உள்பட முந்தைய தி.மு.க அரசு கொண்டுவந்த நல்ல திட்டங்கள் பலவற்றை ரத்துச் செய்தார் ஜெயலலிதா. இதற்காக சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.சமச்சீர் கல்வி ரத்து செய்யக்கூடாது என சென்னை ஐகோர்ட்டில் பொது நலமனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் சட்டமன்றத்தில் அம்மா நிறைவேற்றிய சட்டத்திருத்தம் செல்லத்தக்கதல்ல என்றும் ஜூலை 22 ஆம் தேதிக்குள் கருணாநிதி அரசால் தயாரிக்கப்பட்டு, அம்மாவின் அரசால் ஸ்டிக்கர் ஒட்டி மேம்படுத்தப்பட்ட சமச்சீர் பாடத்திட்ட நூல்களை மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment