June 10, கிருஷ்ணகிரி மாவட்டம் மலைகள் அதிகம் உள்ள பகுதியாகும். இந்த மாவட்டத்தில் அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன.
வழக்கமாக 8 வயது முதல் 14 வயதிற்குள் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து கொடுத்து விடுகிறார்கள். இதே போல தர்மபுரி மாவட்டத்திலும் அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடக்கின்றன.
இதற்கு காரணம் வறுமை மற்றும் படிப்பறிவு இல்லாதது. மேலும் இவர்கள் தொழில் நிமித்தமாக வெளியூர்களுக்கு சென்று விடுகிறார்கள். இதனால் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக இளவயதிலேயே பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுத்து விடுகிறார்கள்.
அதுவும் சொந்த உறவினர்களுக்கே பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுத்து விடுகிறார்கள். இந்த இரண்டு மாவட்ட மக்களும் பெங்களுர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள குவாரிகள், செங்கல் சூளைகள், பாறை உடைக்கும் இடங்கள், கல், மண் அள்ளி வரும் லாரிகளில் கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள்.
இதனால் இவர்களது குழந்தைகள் வீட்டில் தனியாக இருக்கின்றன. அவர்கள் பாதுகாப்பை கருதி இளம் வயதில் திருமணம் செய்து வைத்து விடுவதாக கிராம மக்கள் கூறுகிறார்கள். கடந்த வாரம் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே 3 குழந்தை திருமணங்களை போலீஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
சுட்டியை சொடுக்கி படிக்கவும்.
===> “பெண்களுக்கு எட்டு வயதுக்குள் திருமணம் செய்து விடு” - வேதம்.-- "குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்து வைக்கக்கூடாது“ உத்தரவிட்ட இந்தியாவின் ஆங்கிலேய அரசாங்கம்”.
===> எட்டு வயதுக்குள் உன் மகளை திருமணம் செய்து கொடுக்காவிட்டால் மகளுடைய மாதவிடாயை அருந்து????.
பகுதி 45. மகளை எட்டு வயதுக்குள் திருமணம் செய்து கொடுத்துவிடு. அவள் ருதுவாகித்தான் கல்யாணம் பண்ணி வைக்கிறான் என்றால் தகப்பனுக்கு மிக அசிங்கமான குமட்டுகின்ற தண்டனை - மநு.
..
தடுப்பதில் உள்ளக் குறைப்பாடுகளே இது .. குறிப்பாக பாரம்பரியப் பற்றும், அறியாமை நிறைந்த பகுதிகளில் இது அதிகமாக நடக்கின்றன. கண்ணமலை போன்ற பகுதிகளில் கிராமங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாததும், பொருளாதார நலிவுமே இவைப் போன்ற செயல்களுக்கு காரணமாக இருக்கின்றன !!!
Post a Comment