சென்னை, ஜூன். 9-சட்டசபையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு தனி தீர்மானத்தை கொண்டு வந்து முன்மொழிந்தார்.அதன் விவரம் வருமாறு:-
இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் மூலம் மட்டுமேநடைமுறைப்படுத்த முடியும் என 1960-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பெரு பாரி வழக்கில் தீர்ப்பளித்தது.
ஆனால், உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என 2008-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை தன்னை இவ்வழக்கில் சேர்த்துக் கொள்ளும்படி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தீர்மானிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் எதிர்க்கட்சித்தலைவர் விஜயகாந்த், சவுந்தர்ராஜன் (மார்க்சிஸ்டு கம்யூ.), முத்துக்குமரன் (இந்திய கம்யூ.), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), ஜவாஹிருல்லா (மனிதநேயமக்கள் கட்சி) ஆகியோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
முதல்- அமைச்சர் ஜெயலலிதா பதிலுரைக்கு பின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்டசபைக்குள் வரவில்லை. அதனால் விவாதத்தில் பங்கேற்கவில்லை.
No comments:
Post a Comment