Jun 8, 2011

யாழினியின் மன ஓசைகள்!!

பகிரப்படாத என் வாழ்வின் பக்கங்களில் ஆசைகள் நிறைந்திருக்கின்றன..
பட்டாம்பூச்சியாய் சிறகடிக்க எண்ணிய
என் ஆசைகள்...
பட்டுப்புடவையாய் செத்துப்போயின..
பட்டுப்புடவை பார்ப்போருக்கழகு...
இழைபிரிக்க வெந்நீரில் வெந்தவலி ...?
கூட்டுப்புழு கதறும் சத்தம்கூடக் கேட்காமல்
கருவே கல்லறையானது போல்...என்
ஆசைகள் எனக்குள்ளேயே புதைந்துபோயின.,,
என் சிறகிலிருந்து பிரிந்த இறகுகள்
உங்கள் காலடிகளில் சிதறிக்கிடக்கின்றன
இயன்றவர் சேகரித்துத் தாருங்கள்
மீண்டும் ஒருமுறை முயற்சிக்கிறேன்..
இறகுகள்கூட்டி சிறகுசெய்து பறப்பதற்கு..!!

5 comments:

Anonymous said...

வலிகளின் விழுதாய் வந்த வரிகள்..
நெஞ்சின் சுமையாய் வந்தவிழுதுகள்..
நெஞ்சம் வலிக்க வைக்கும் வரிகள்..
நெஞ்சை நெகிழ வைக்கும் வார்த்தைகள்..

Anonymous said...

வலிகளை சுமந்த நெஞ்சின் நினைவுகளை அழகாக சொன்ன யாழினிக்கு நன்றி.

Anonymous said...

இது யாழில் இருந்து வந்த வரிகள் ஆகவே உணர்வு பூர்வமாக இருந்தது.

Anonymous said...

இது ஈழமக்களின் சோகங்களை குரலாய் ஒலிக்கு கவிதை போல் உள்ளது

அம்பாளடியாள் said...

நெஞ்சில் வலியை உணர்த்தும் மங்கை இவளின் கவிதை வரிகள் கண்ணீர்த் துளிகொண்டு எழுதிய சிறு காவியமா!....
பெண்ணே உந்தன் எண்ணம்போல் வண்ணச் சிறகுகள் முளைத்து இன்றே வானில் வலம்வருவாய்
என்றும் மகிழ்வுடனே வாழ்த்துக்கள்..