பெய்ஜிங், ஜூன் 27: ஆங்கிலம் கற்பதற்காக அமெரிக்காவுக்கு சீன மாணவர்கள் படையெடுத்துச் செல்கின்றனர்.
சீனாவைப் பொறுத்தமட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தாய்மொழியான சீன மொழிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆங்கிலத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை.
ஆங்கில அறிவு இல்லாமல் அந்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு மேல்படிப்பு படிக்கச் செல்வோருக்கும், வேலை தேடிச் செல்வோருக்கும் சிரமமாக உள்ளது.
இதனால் தங்களது குழந்தைகள் உள்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போதே ஆங்கிலத்திலும் புலமை பெற வேண்டும் என்று சீனப் பெற்றோர்கள் இப்போது நினைக்கத் தொடங்கிவிட்டனர்.
லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி தங்களது குழந்தைகளை அமெரிக்காவுக்கு ஆங்கிலம் கற்க அனுப்பி வருகின்றனர். பெரும்பாலும் அமெரிக்காவில் நடைபெறும் கோடைகால ஆங்கிலப் பயிற்சி மையங்களில்தான் சீன மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்காவில் உள்ள இந்தக் கோடைகால ஆங்கிலப் பயிற்சி மையங்களில் சீன மாணவர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
இந்த ஆண்டு மட்டும் சுமார் 60,000 மாணவர்கள் ஆங்கிலம் கற்க அமெரிக்காவுக்கு செல்லவுள்ளதாக அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி சீனர்கள் ஆங்கிலம் கற்கப் படையெடுத்து வருவதை மையமாக வைத்து சமீபகாலமாக அமெரிக்காவில் காளான்களாய் ஆங்கிலப் பயிற்சி மையங்கள் முளைக்கத் தொடங்கியுள்ளன.
இதில் சிறப்பு என்னவென்றால் இந்தப் பயிற்சி மையங்கள் அனைத்துமே சீனக் கல்விமுறையை அடிப்படையாக வைத்து ஆங்கிலத்தைப் போதிக்கின்றன என்பதுதான். இதனால் இவை சீனர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்தப் பயிற்சி மையங்கள் அனைத்துமே குறுகிய கால ஆங்கிலப் பயிற்சிக்கு ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் 2 லட்சத்துக்கு மேலான கட்டணத்தைக் வசூலிப்பதாகத் தெரியவந்துள்ளது.

1 comment:
நல்லதொரு தகவலைத் தந்தீர்கள்.
பகிர்வுக்கு மிக்க நன்றி......
Post a Comment