Jun 16, 2011

சுவாமி நிகமானந்தா மரணம்! பாஜக அரசு ராஜினாமா செய்யுமா?

JUNE 16, கங்கை நதியை சுத்தப்படுத்தக் கோரி சுமார் 4 மாதங்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த சுவாமி நிகமானந்தா உயிரிழந்ததற்கு, மாநில பாஜக அரசின் புறக்கணிப்பு தான் காரணம் என்றும், அதற்கு பொறுப்பு ஏற்று உத்தரகாண்ட் முதல்வர் நிஷாங்க் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கிஷோர் உபாத்யாய் கூறியுள்ளதாவது, "சுவாமி நிகமானந்தாவுக்கு உரிய மருத்துவ வசதிகளை செய்ய மாநில அரசு தவறிவிட்டது. இதன் மூலம், முதல்வர் நிஷாங்க் தலைமையிலான பாஜக அரசு தனது கடமையில் இருந்து விலகியுள்ளது. எனவே, நிகமானந்தாவின் உயிரிழப்புக்கு பொறுப்பு ஏற்று முதல்வர் நிஷாங்க் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றார்.

1 comment:

Anonymous said...

சுவாமி நிகமானந்தா தனித்து இறக்கவில்லை அவருடன் சேர்ந்து இந்தியாவின் இறையாண்மையும் இறந்துவிட்டது. ஹிந்து மதத்துடன் ஒட்டிக்கொண்டிருந்த மனிதாபிமானமும் இந்த நல்ல வீரத்துறவியுடன் சேர்ந்தே இறந்துவிட்டதோ என்று நம்பத்தோன்றுகிறது. நம் பக்கம் உள்ள மக்களுக்கு தெரிந்தவரை வீரத்துறவி என்றால் ராம கொவாலனைத்தான் தெரியும். அவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வரப்போகிறது. வீரத்துறவி பட்டம் அவருக்கு மட்டுமே உரியதல்லவா?

NAA SAMAJ (புரியாதவன்)