
வெற்றி பெறுவதற்குமுன் இருந்த பணிவு, அடக்கத்தைவிட வெற்றிபெற்றபின் அந்த நற்குணங்கள் அதிகமாக இருக்கவேண்டும். அந்த நன்னடத்தைக்கு அந்தந்த கட்சியின் தலைவர்களே எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும்.
ஏகபோக திமிருக்கும், அகந்தைக்கும் உதாரணமாக திகழ்வது அவர்களின் சுருக்கமான அரசியல் வாழ்க்கைக்கு காரணமாக அமைவது மட்டுமல்லாமல் அவர்களை வரலாறும் ஏகடியம் செய்யும்.
தலைவனாய் வருதல் விபத்து தலைவனுக்குண்டான பண்புகளை தனதாக்கிக்கொல்வதில்தான் தலைமைத்துவம் அடங்கியுள்ளது. அதுதான் மகத்துவமும் கூட.
மனதில் வரும் உணர்வுகளையெல்லாம் செயலாக்கிச்சென்றால்..... அது தலைவனின் பண்பல்ல. இன்று பதவிக்கு வந்த இவர்களின் செயல்களின் பரிணாமங்களை, அதன் முடிவுகளை 4 ஆம் வருட முடிவில் காண்போம்.
அ.இ.அ.தி.மு.க. வின் உறுப்பினர்களும் அவர்களின் தலைவியுமான செல்வி ஜெயலலிதாவும் முன்னாள் முதல் அமைச்சரை அவரின் கடந்த கால எல்லா நடவடிக்கைகளையும் விமரிசிப்பதும், மாற்றி அமைப்பதும் ஒரு உயர்ந்த தன்மைக்கு உரியதன்று.
எனவே, ஒப்பாரும், மிக்காரும் இல்லா ஒரு உன்னத ஆட்சியை கொண்டுவர தனக்கடுத்து சுயநலமில்லா சான்றோரின் சகவாசம் வேண்டும்.
தான் பெரும்பான்மை பெற்றதினால், சிறுபான்மை அவையவரின் வேண்டுகோளுக்கு செவி மடுக்காது தான்தோன்றித்தனமாய் செய்யும் செயல்கள் நல்லனவல்ல. இது ஒரு பேரினவாதத்தின் மற்றொரு முகமாகவே நல்லோரால் காணப்படும்.
5 comments:
யோவ் நீ என்ன அடிக்கடி கட்சி மாரிக்கிட்டிருக்கே. முதல்ல கருனாநிதிய திட்டினா, இப்போ செல்வி ஜெயலலிதாவையும், கேப்டன் ஐயும் திட்டுறாய்.
arumugam
நிச்சயமா அவை அடக்கம் தேவை, அது இந்திய அரசியல்வாதிகளுக்கு பொதுவே கிடையாது என்பதுதான் உண்மை.
யார் நல்லதை செய்தாலும் பாராட்டனும் அதுதான் ஒரு எழுத்தாளனின், சிந்தனையாளின் பண்பு, அதை சரியா செய்கிறார் என்று நம்புகிறேன். நான் படித்த வகையில் தப்பாக தெரியவில்லை
கருணாநிதி கெட்டவர், ஜெயலலிதா கெட்டவர், விஜயகாந்த் கெட்டவர், காங்கிரஸ் கெட்ட கட்சி, ப.ஜ.க. கெட்ட கட்சி, பின்ன யாரைத்தான் தேர்ந்தெடுப்பது, சொல்லித் தொலைய்யுமய்யா.
arumugam
ஐயா ஆறுமுகம் அவர்களே! யார்தான் நல்லவர் என்பதை நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுக்க நமக்கு வாய்ப்புகள் உள்ளனவா? இல்லை.
இருக்கும் குற்றவாளிகளில் குறைந்த அளவு குற்றம் செய்தவர் யாரென்று பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
நல்ல பண்புகள் உள்ள பெரியவர்கள் இந்த ரௌடிகளோடு மல்லுக்கட்ட முடியாமல் ஒதுங்கி இருக்கிறார்கள். ஓன்று அவர்களுக்கு கிளாமர் இல்லை. அதிகப் பிரசங்கித்தனமும் இல்லை. கொள்ளை அடித்த காசு பணங்களும் இல்லை. அதனால் வாழ்க, ஒழிக கோஷம் போட கோமாளிகளும் கூத்தாடிகளும் அருகில் இல்லை.
இதுபோல் ஒதுங்கி இருக்கும் தலைவர்களுள் முதலாமவரும், முக்கியமானவரும். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் R . நல்லகண்ணு. என்றைக்காவது நம் பத்திரிக்கை களில் முதலாம் பக்கத்தில் இடம் பிடித்திருக்கிறாரா? பத்திரிக்கைகளும் மக்களுக்கு நல்லதை எடுத்து சொல்லவேண்டும் என்ற சமூக அக்கறையோடு நடந்து கொள்வதில்லை மக்களுக்கும் நல்லதை காணக்கூடிய அறிவில் தெளிவு இல்லை. எனவேதான் இந்த தலைப்பு. "பாவம் தமிழ் மக்கள்"
Post a Comment