JUNE 10, சட்டீஸ்கர் மாநிலம் தன்டேவடா மாவட்டத்தில் நக்சலைட்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 போலீசார் உடல் சிதறி பலியாயினர். அவர்கள் சென்ற கண்ணி வெடி அகற்றும் வாகனம் சின்னாபின்னமானது.
தன்டேவடா காட்டுப் பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரோந்து சென்ற மத்திய ரிசர்வ் போலீசார் மீது மலை உச்சியில் பதுங்கியிருந்த நக்சலைட்கள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.
இதில் 76 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீசாரின் ஆயுதங்களை கொள்ளையடித்த நக்சலைட்கள், காட்டுக்குள் சென்று மறைந்தனர். இது தன்டேவடா மாவட்டத்தில் நடந்த மிகப்பெரிய படுகொலை சம்பவமாக கருதப்பட்டது.
இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க, போலீசாரின் தேடுதல் வேட்டையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்நிலையில் தன்டேவடா மாவட்டம் கதிகல்யான் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்த சட்டீஸ்கர் போலீசார் முடிவு செய்தனர்.
இதற்காக அந்தப் பகுதிக்கு கண்ணி வெடி அகற்றும் வாகனத்தை முதலில் அனுப்பினர். அதில் சிறப்பு போலீஸ் அதிகாரிகள் 7 பேரும், போலீசார் 6 பேரும் புறப்பட்டனர். கதான் என்ற கிராமத்தில் உள்ள சிறிய பாலத்தை போலீசாரின் வாகனம் கடக்க முயன்றது. அப்போது தரையில் பதித்து வைத்திருந்த குண்டை நக்சலைட்கள் வெடிக்கச் செய்தனர்.
இதில் கண்ணிவெடி அகற்று வாகனம் தூள்தூளாக சிதறியது. வாகனத்தை நோக்கி நக்சலைட்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் வாகனத்தில் பயணம் செய்த 10 போலீசார் உடல் சிதறி பலியாயினர். 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்கள் பஸ்தார் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டனர். நக்சல்கள், 70 கிலோ வெடிகுண்டை தரையில் புதைத்து வைத்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

No comments:
Post a Comment