May 12, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
வாக்கு எண்ணிக்கையின்போது `டேட்டா என்ட்ரி' செய்வதில் முறைகேடு செய்ய வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு ஜெயலலிதா புகார் அனுப்ப இருக்கிறாரே?
தேர்தல் அதிகாரியின் மேசை அருகேதான் டேட்டா என்ட்ரி மேசையும் இருக்க வேண்டும். கையினால் கணக்கு போடப்படுவதையும், கம்யூட்டர் மூலம் பதிவு செய்யப்படுவதையும் சரி பார்த்தே முடிவு அறிவிக்கப்படும்.
இதை தேர்தல் பார்வையாளரும், தேர்தல் அதிகாரியும் பார்வையிடுவார்கள். அவர்களின் கண்காணிப்பில் தான் நடக்கும். அதனால் எந்த வித முறைகேடும் வராது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
தேர்தல் ஆணையம் வரம்பு மீறி செயல்பட்டதாக முதல் அமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறாரே? தேர்தல் விதிமுறைகளின் படிதான் நான் நடந்துகொண்டேன். அரசியல் கட்சிகளுக்கு இடையே பாகுபாடு பார்த்து செயல்படவில்லை.
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பெரிய அளவில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன?
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 6 ஆயிரத்து 818 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 386 தள்ளுபடி செய்யப்பட்டன. 1378 வழக்குகளில் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளன. 4ஆயிரத்து 557 வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ளன. 389 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment