May 12, ஜார்கண்ட் மாநிலம் ஹஸாரிபாக் மாவட்டத்தில் 10 து 10 சுற்றளவு கொண்ட, 400 அடி ஆழத்திற்குப் பூமிக்குள் இறங்கிச் சென்று நிலக்கரி எடுக்கப்படுகிறது.
இதற்க்கு குழந்தை தொழிலார்களை சட்ட விரோதமாக பயன்படுத்துகிறார்கள் அங்குள்ள சுரங்க தொழில் செய்யும் முதலாளிகள்.
இது உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயம் நிறைந்ததாகும். 400 அடி ஆழத்திற்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் இந்த சிறுவர், சிறுமிகள் பயணிக்கின்றனர்.
இவர்கள் கைகளில் ஏந்தி செல்வதோ சிறிய மண்ணனை விளக்கு மட்டுமே. இவர்கள் அதிகாலையில் உள்ளே நுழைந்து அந்திசாயும் நேரம் வெளியே வருகின்றனர்.
நிலக்கரியை தோண்டி எடுக்க ஒரு கம்பி, தோண்டிய நிலக்கரியை அள்ளிவர ஒரு கூடை இப்படியாக இப்படியாக கடின இந்த சிறுவர், சிறுமிகள் கடின உழைப்புக்கு உள்ளாக்கப் படுகின்றனர்.
ஹஸாரிபாக் மாவட்டத்தில் மட்டும் இது போன்று நூற்றுக்கணக்கான நிலக்கரிச் சுரங்கங்கள் சட்டவிரோதமான முறையில் இயங்கி வருகின்றன.
இங்கு ஆயிரக்கணக்கான சிறுவர்களும், சிறுமிகளும், பெண்களும் சுரங்க வேலை என்ற பெயரில் தினந்தோறும் மரணத்தோடு விளையாட வைக்கப்படுகின்றனர்.
இது அம்மாநிலத்தின் அமைச்சர்கள், போலீசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தெரிந்துதான் இச்சட்டவிரோதச் சுரங்கங்கள் நடந்து வருகின்றன.
அச்சுரங்கங்களில் ஏற்படும் விபத்துக்களை, சிறுவர்களின் மரணங்களைப் பற்றி பதிவு செய்யவும், விசாரிக்கவும் அரசு முன்வருவதேயில்லை.
இதை தட்டி கேட்க்காத அரசை, அரசு ஊழியர்களை, இந்த லஞ்ச அரசியல்வாதிகளை எல்லாம் நடுரோட்டில் வைத்து சுட்டு தள்ளவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment