May 12, 2011

தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு!!

May 13, கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் பதற்றம் இல்லாமல் வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெறும் என கடலூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

9 தொகுதிகளுக்கும் ஒரு மேற்பார்வையாளரும், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு அப்சர்வரும் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு பார்வையாளராக மத்திய தேர்தல் பார்வையாளர் அமித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

வாக்கு எண்ணப்படும் ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு மைக்ரோ அப்சர்வர், கவுண்டிங் அசிஸ்டெண்ட், கவுன்டிங் சூப்ரவைசர் நியமிக்கப்படுவர். ஒவ்வொரு மேஜைக்கும் வீடியோ கேமரா பொருத்தும் பணிகள் நேற்று நடந்தது.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளிச்சுற்றிற்குள் நுழையும் ஏஜெண்டுகள் மைக்ரோ அப்சர்வர்கள் தங்களின் செல்போன்களை ஒப்படைத்துவிட வேண்டும்.

மத்திய சுற்றில் சீப் ஏஜெண்ட், வேட்பாளர்கள் தங்களின் செல்போன்களை ஒப்படைத்துவிட வேண்டும். உள்சுற்று பகுதியில் செல்போன்கள் பயன்படுத்த யாருக்கும் அனுமதியில்லை.
வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள்,வீடியோ கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

ஒவ்வொரு சுற்று முடிவிலும் விவரங்களும் ஒலிபரப்பப்படும். பெரிய திரையில் விவரங்கள் அறிவிக்கப்படும். கடலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாட்டு பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளன’’ என்று தெரிவித்தார்.

No comments: