May 13, 2011

பணநாயகம் வீழ்ந்து ஜனநாயகம் மலர்ந்தது!! வைகோ!!

May 14, தமிழக வாக்காளர்கள் ஊழல் பணநாயகத்தை வீழ்த்தி, ஜனநாயகத்துக்குப் பொன்மகுடம் சூட்டி விட்டனர் என்று தேர்தல் முடிவுகள் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், தலைவிரித்து ஆடிய ஆளுங்கட்சியின் ஊழல், அராஜகம், திரைப்படத் துறை, தொழில் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் கபளீகரம் செய்ய முயன்ற ஒரு குடும்ப ஆதிக்கம்,

பன்னாட்டுப் பகாசுரக் கம்பெனிகளுக்குத் தடையற்ற மின்சாரம் தந்துவிட்டு, நிர்வாகச் சீர்கேட்டால் தமிழகத்தை இருளில் தள்ளிய கடுமையான மின்வெட்டு, தாங்க முடியாத விலைவாசி ஏற்றம்.

தமிழக வாழ்வாதாரங்களைக் காக்கும் கடமையில் தவறிய குற்றம், அனைத்துக்கும் மேலாக ஈழத் தமிழ் இனப் படுகொலைக்கு, காங்கிரஸ் அரசுக்குத் துணைநின்ற துரோகம், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பை இழந்த அபாயம்.

இவை அனைத்தையும் எதிர்த்து ஆழிப்பேரலையாய் மக்கள் சக்தி எழுந்து, ஆளுங்கட்சியின் ஊழல் பணநாயகத்தையும், அதிகார வன்முறையையும் வாரிச் சுருட்டி எறிந்துவிட்டது. தேர்தலில் மதிமுக பங்கு ஏற்காவிடினும், தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து கடந்த 5 வருடமாக போராடிவந்தது.

எதிர்காலத்தில், இனி அதிகார துஷ்பிரயோகத்தையும், ஊழல் பணத்தையும் கொண்டு எவரும் தேர்தலில் வெல்ல முடியாது. எனும் எச்சரிக்கை தரும் சரியான பாடத்தை, வாக்காளர்கள் கற்பித்து உள்ளனர். தேர்தல் ஆணையம் தன் கடமையில் வென்று உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

1 comment:

kankaatchi.blogspot.com said...

நாட்டு மக்களின் நலனில்; அக்கறையில்லாத
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?

120கோடி மக்களின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வழிவகைகளை ஏற்படுத்தி தர அனுப்பிவைக்கப்பட்ட நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் ஒவ்வொரு கூட்ட தொடரிலும் நடந்துகொள்கின்ற விதம் அறுவருக்கதக்கும் படியாகவும் முகம் சுளிக்க கூடியதாகவும் இருக்கிறது

இந்நிலை தொடர்ந்து சில ஆண்டுகளாக நீடித்து வருவது கவலைக்குரியதாகவும் ஜனநாயகத்தை கேள்விக்குரியதாகவும் ஆக்கிகொண்டிருக்கிறது

இதில் ஆளும் கட்சியும் எதிர் கட்சிகளும் சூதாட்டம் நடத்திக்கொண்டு மக்களின் வரிப்பணம் கோடிகணக்கான ரூபாய்களை வீணடித்துகொண்டு வருகின்றன

இதை தவிர பல லட்சம் கோடிகணக்கான ரூபாய்களை ஊழல் செய்து ஆளும் கட்சி அமைச்சர்களும், துறை அதிகாரிகளும், அவர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு பகல் கொள்ளைஅடிக்கும் வர்த்தக நிறுவனங்களும் மக்களை மோசடி செய்து மகிழ்ச்சியாக உலா வருகின்றனர்.

மக்களோ நாளுக்கு நாள் ஏமாற்றப்பட்டு,தினம் தினம் துன்பங்களை அனுபவித்து கொண்டு ஏதும் செய்வதறியாது அல்லல் பட்டுகொண்டு வருகின்றனர்

இந்த அழகில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏராளமான சலுகைகள்.இலவசங்கள் தொகுதி நிதியில் கமிஷன் என ஏராளமான வருமானங்கள் இவ்வளவையும் பெற்றுக்கொண்டு தான் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி மக்களின் முன்னேற்றதிர்ற்கு எதுவும் செய்யாமல் ராஜ போக வாழ்க்கை வாழுவது மக்களுக்கு செய்யும் நம்பிக்கை துரோகமாகும்


தங்கள் தொகுதியில் மாநில அரசுகளால் நிறைவேற்றமுடியாத அதிக நிதி தேவைப்படும் திட்டங்களை நிறைவேற்ற எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடவடிக்கை எடுப்பதில்லை. தங்கள் தொகுதி நிதியில் ஒரு சில கட்டிடங்களையோ அல்லது ஒரு சில சாலை பணிகளையோ நிறைவேற்றுவதோடு ஒதுங்கிகொள்கின்றனர்.


தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றதிற்கு சென்ற பிறகு எந்த உறுப்பினரும் மக்களை சந்திப்பதே கிடையாது.அப்படி சந்தித்தால் அது இரவு நேர கட்சி கூட்டமாகத்தான் இருக்கும்
.
அவர்கள் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி மக்கள் குறைகளை கேட்பதும் கிடையாது
.
அப்படி பெற்றுகொண்டாலும் அவைகள் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கபடுவதோடு . அவைகள் மீது முறையான தீர்வு கிடையாது.


மக்கள் அவர்களை சந்திக்க நகரத்திற்கு வந்து காத்து கிடக்க வேண்டும் அவர்களின் ஆதரவாளர்களை மீறி யாரும் அந்த குறுநில மன்னரை சந்திக்க முடியாது. இந்நிலை என்று மாறுமோ தெரியவில்லை?.


மன்னராட்சி ஒழிந்தது. ஆனால் இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என ஏராளமான மன்னர்கள் மக்களிடையே தன் சகாக்களுடன் ஆடம்பரமாக வலம் வந்துகொண்டு இருக்கின்றனர்

அரசியல்வாதிகளின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஐந்தாண்டுக்கொருமுறை தன் அறியாமையாலும், வறுமையினாலும் சில இலவசங்களை அவர்களிடம் பெற்றுக்கொண்டு தங்கள் வாக்கை அவர்களுக்கு கொடுத்துவிட்டு வழக்கம்போல் மக்கள் முட்டாள்களாகி தன் தலைவிதியை நொந்துகொண்டு நடைபிணம்போல் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்




இனிமேலாவது மக்களவையிலோ ,மேலவையிலோ மக்களுக்கு பயன்படும் படியான நடவடிக்கைள் ஏதும் மேற்கொள்ளாமல் கூச்சலும் குழப்பமும் விளைவித்தால் அன்றைய தினத்திற்கான செலவுகள்,படிகள் ஆகியவற்றை கணக்கிட்டு உறுப்பினர்களின் படியிலிருந்து அன்றே வசூல் செய்து அரசு கணக்கில் சேர்க்கவேண்டும்

கண்ணியமற்ற முறையில் நடந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு தண்டனையும் விளையாட்டுகளில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வீரர்களுக்கு அபராத தொகை விதிப்பது போல், அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றவேண்டும்

அப்படி செய்தால் நாடு உருப்படும். நாட்டு மக்களுக்கும் நன்மை ஏற்படும்

உண்மையை நீண்ட நாள் மறைக்க முடியாது. மக்களின் ஆதங்கத்தை
வெளிபடுத்தாமல் இருக்கவும் முடியாது.ஆனால் உண்மை இதுதான்