May 14, தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.இதையடுத்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மன்மோகன் சிங், அ.தி.மு.க.,பொதுச் செயலர் ஜெயலலிதாவை டெலிபோனில் தொடர்பு கொண்டு, தேர்தலில் வெற்றிபெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தார்.
இத்தகவலை பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அதிமுகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயற்சி செய்வதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

1 comment:
அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே?அப்ப யோசிச்சிருக்கணும்!ரயில தவற வுட்டுட்டு கலியாணத்துக்குப் போக முடியலன்னு புலம்பி இன்னா பண்ணுறது?
Post a Comment